ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு ஆணை - Date : 10.05.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2024

ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு ஆணை - Date : 10.05.2023

 

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் கடிதத்தில் , கோயில்களின் நகரமாம் கும்பகோணம் மாநகரில் , தென்பரதக் கும்பமேளா என்று அனைவராலும் அழைக்கப்படும் மாகாமகப் பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் , குடந்தையில் உள்ள மகாமகத் திருக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று சிறப்பாக நடைபெற்று வரும் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு 12 சைவத் திருக்கோயில்கள் மற்றும் 5 வைணவத் திருகோயில்களின் சுவாமிகள் , தீர்த்தவாரி செய்வதற்காக வருகை தருகின்றனர் என்றும் , இப்பதினேழு சுவாமிகளையும் தரிசனம் செய்வதற்காகவும் , மகாமகத் திருக்குளத்தில் , புனித நீராடுவதற்காகவும் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிகின்றனர் என்றும் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் தம் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கவும் செய்கின்றனர் என்றும் , இந்த வருடம் 06.03.2023 அன்று மாசிமகத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் , இத்தகையப் பெருமை வாய்ந்த மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து , அதனை ஏற்றுக் கொண்டு . அவ்வாறே ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு ஆணையிடுகிறது.

இந்த உள்ளூர் விடுறை நாட்கள் செலாவணி முறிச் சட்டம் , 1881 ( Under Negotiable Instruments Act , 1881 ) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கும்போது , மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் , சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

GO NO : 297 , DATE : 10.05.2023 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி