“அச்சமற்று எதிர்கொள்ளுங்கள்” - பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2024

“அச்சமற்று எதிர்கொள்ளுங்கள்” - பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 

"பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ளமாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான பிளஸ் 2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான பிளஸ் 2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.


தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்" என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.


தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்கி மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது.


முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

1 comment:

 1. தமிழக கல்வி துறையில் அவலம்:
  தொடக்க பள்ளிகள் :

  பணக்கார குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர். ஏழை மாணவர்கள் படிக்கும் ஈராசிரிய தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர். ஒரு ஆசிரியர் விடுமுறை எடுத்து விட்டால் ஒன்று முதல் 5 வகுப்பு வரை ஒரே ஆசிரியர். கல்வித்தரம் எப்படி இருக்கும்.

  நடுநிலை பள்ளிகள்:

  வசதியானவர் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர். ஆனால் ஏழை மாணவர்கள் படிக்கும் நடுநிலை பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர் கணக்கு பாடம் கற்பிக்கும் நிலை.
  அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயர்த்த நமது அரசு முயல வேண்டும். தொடக்க கல்வி என்பது அடிப்படை , இதிலிருந்து நமது சமூக நீதியை முதல்வர் அவர்கள் நிலை நாட்ட வேண்டும்

  ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஜாக்டா ஜியோ:

  உங்கள் சம்பளத்திற்கு போராடும் நீங்கள் உங்கள் குழந்தைகளை இது போன்ற பள்ளிகளில் படிக்க வைப்பீர்களா? இந்த சமூக நீதிக்கும் சேர்த்து போராடுங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி