இந்தியாவின் முதல் AI ஆசிரியர் ! கேரள பள்ளி வரலாற்று சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2024

இந்தியாவின் முதல் AI ஆசிரியர் ! கேரள பள்ளி வரலாற்று சாதனை

 

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்க திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியது. மேக்கர்லேப்ஸ் எஜுடெக் எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தி ‘ஐரிஸ்’ என்ற பெயரில் மனித இயல்பு கொண்ட ரோபோ ஆசிரியரை இப்பள்ளி வடிவமைத்துள்ளது.


அச்சு அசலாக பெண் உருவில்காட்சியளிக்கும் ‘ஐரிஸ்’ ரோபோபன்மொழி புலமை கொண்டது. பல்வேறு பாடங்களிலிருந்து கேள்விகள் எழுப்பினாலும் சரளமாக பேசியபடி பதில் அளிக்கும். இதன் கீழ் பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் எளிதில்இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லும்.


இதுகுறித்து மேக்கர்லேப்ஸ் நிறுவனம் இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொலி பதிவில், ‘‘ ஐரிஸ் எனும் ஏஐ ஆசிரியர் ரோபோவை அறிமுகம் செய்வதில் மேக்கர்லேப்ஸ் எஜுடெக் பெருமை கொள்கிறது. இதன் மூலம் கற்றல் துறையில் புதிய போக்கை உண்டாக்கி புத்தாக்கத்தின் முன்னோடியாகத் திகழ்கிறோம்” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.


தனிப்பட்ட முறையில் கற்று கொள்ளவும், பலவிதமான கற்றல்-கற்பிக்கும் முறைகளை பின்பற்றவும், மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படிக்கவும் ஐரிஸ் ரோபோகைகொடுக்கும். இந்த கண்டுபிடிப்பு கேரள கல்வி பரப்பில் புதியவளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தியாவின் முதல் AI ஆசிரியர் ! கேரள பள்ளி வரலாற்று சாதனை👇

Video News - Click here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி