புதிய கல்விக் கொள்கையை ஒரு போதும் தமிழ்நாடு அரசு ஏற்காது-அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2024

புதிய கல்விக் கொள்கையை ஒரு போதும் தமிழ்நாடு அரசு ஏற்காது-அமைச்சர் அன்பில் மகேஷ்

 

புதிய கல்விக்  கொள்கையை தமிழ்நாடு அரசு ஒரு போதும் ஏற்காது என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக கூறியுள்ளார்.  திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றின் பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அன்பில் மகேஷ், திமுக காரனாக  புதிய கல்விக் கொள்கையை தொடக்கம் முதலே எதிர்த்து வருவதாக கூறினார். மேலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று மத்திய அமைச்சரிடமே தாம் தெரிவித்துவிட்டதாக  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

 இவை தவிர மாநிலத்துக்கென ஒரு கமிட்டி உருவாக்கப்படும். மாநில அரசுக்கு தரவேண்டிய மூன்றாவது தவணை நான்காவது தவணை 1800 கோடி மட்டுமல்ல அடுத்த ஆண்டு தரவேண்டிய 3 ஆயிரத்து 800 கோடி ரூபாயையும்  மத்திய அரசு, இதில் தொடர்பு படுத்துகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி