முதல் தேர்தல் பயிற்சி வகுப்பை மாற்று தேதியில் நடத்த கிறிஸ்தவர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2024

முதல் தேர்தல் பயிற்சி வகுப்பை மாற்று தேதியில் நடத்த கிறிஸ்தவர்கள் கோரிக்கை

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தற்போது இயேசுபிரானின் பாடுகளை தியானிக்கும் வகையில் தவசு காலத்தை அனுசரித்து வருகிறார்கள். தவசு காலத்தின் மிக முக்கிய நிகழ்வாக புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது.  அந்த புனித வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்து ஞாயிறு என்று கடைபிடிக்கப்படுகிறது. 


இயேசு கோவேரி கழுதையில் ஏறி ஓசன்னா என பாடி அவரை அழைத்துச் சென்றதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குறுத்தோலையை கையில் ஏந்தி பேரணியாகச் சென்று இறைவழிபாட்டில் ஈடுபடுவது உலகம் முழுவதும் தொன்று தொட்டு நடந்து கொண்டிருக்கக் கூடிய நிகழ்வு. இந்த வருடம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ மக்கள் குருத்து ஞாயிறு கடைபிடிக்கிறார்கள்.  


அதே நாளில் இந்திய தேர்தல் ஆணையம் ஆனது தமிழகத்தில் தேர்தல் முதல் பயிற்சி வகுப்பு என அறிவித்துள்ளது எனவே சிறுபான்மையினர் கிறிஸ்தவ மக்களின் இறை வழிபாட்டை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தல் பயிற்சி வகுப்புக்கான தேதியை மாற்றி மதச்சார்பின்மை நாடு என்பதை கடைபிடிக்க வேண்டும் என கிறிஸ்தவ மக்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர்.


1 comment:

  1. who is the article writer... election commission sunday la practice and demo session arrange panuna varanum entha mathama irunthalum... athu sivaratriyo illa ramzano illa christmaso... ithukum mathasarbinmaikum ena sammantham iruku.. intha article than mathaveriya thoondura mathiri iruku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி