பள்ளி வேலைநாள் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2024

பள்ளி வேலைநாள் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை.

 பள்ளி வேலைநாள் தொடர்பாக கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை....


கரூர் கல்வி மாவட்டம் ( தொடக்கக் கல்வி ) , அனைத்து ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 05.04.2024 வரையிலும் , நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 12.04.2024 வரையிலும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.


விடுபட்ட தேர்வுகள் 22.04.24 மற்றும் 23.04.24 ஆகிய தேதிகளில் நடைபெறும் . தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் அந்நாளில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் . ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுகிறது.


 அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்ற போது அது on duty ஆக கருதலாம் . தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி , மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி promotion registration- ல் பதிவு செய்கின்ற பணி , மாணவர் சேர்க்கை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்தல் மற்றும் பிற பணிகள் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க வரும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி