பள்ளி வளாகத்தில் செயல்படக்கூடிய கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு உத்தரவு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2024

பள்ளி வளாகத்தில் செயல்படக்கூடிய கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு உத்தரவு!!!

 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவருவதாகவும் , அது பள்ளி நிர்வாகத்திற்கு இடையூறாக உள்ளதாகவும் அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகங்களை உடனடியாக பள்ளி வளாகத்திற்கு வெளியே ஏதேனும் ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்து , அதற்கு பொதுப்பணித்துறையால் நிர்ணயம் செய்யப்படும் வாடகையினை நிர்ணயம் செய்து கொள்ளவும் அதற்கான கருத்துருவினை 30.04.2024 க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளிக் கட்டிடங்களில் செயல்படவில்லை என்பதை கண்டிப்பாக உறுதி செய்தல் வேண்டும் என்றும் , இல்லையெனில் மேற்காணும் பணியினை செயலாக்கம் செய்யப்படவில்லை என்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் இயங்கி வரும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்களை பொதுபணித்துறை நிர்ணயிக்கும் வாடகையின் அடிப்படையில் உடனடியாக இடம் மாற்றம் செய்து விட்டு அதன் அறிக்கையினை 10.04.2024 க்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறும் மற்றும் வரும் கல்வி ஆண்டில் , பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் எந்த ஒரு முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்களும் செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறது

பள்ளி வளாகத்தில் செயல்படக்கூடிய கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு உத்தரவு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கடிதம்

CEOs & DEOs Offices in School Buildings Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி