குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2024

குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி

 

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு 90 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி இளநிலை பட்டப் படிப்பு ஆகும்.


முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்த மே 22-ம் தேதி தொடங்கப்பட்டது. இப்பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை நடத்தப்பட்டு வருகின்றன.


பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் விவரங்களுக்கு, decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி