தமிழகம் முழுவதும் 3,227 அரசுப் பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 34,738 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 2 லட்சத்து 4,692 பேர் தேர்ச்சி (91.02%) பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 1.22 சதவீதம் அதிகம். அதேபோல, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.
இந்த முறை 3,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சத்து 43,985 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 2 லட்சத்து 40,824 பேர் தேர்ச்சி (98.70%) பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.38 சதவீதம் குறைவு. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 99 சதவீதத்துக்கு குறையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரியர் முடிவுகள் வெளியீடு: கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை, பிளஸ் 2 தேர்வுடன் சேர்த்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். அவர்களுக்கான அரியர் பாடங்களின் தேர்வு முடிவுகளையும் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதை dge.tn.gov.in எனும் தளத்தில் மாணவர்கள் அறியலாம். அதேபோல, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுத 8,191 தனித் தேர்வர்கள் பதிவு செய்தனர். அவர்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். அவர்களும் தங்கள் முடிவுகளை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் தயக்கமின்றி அரசின் இலவச உதவி மைய எண் 104-க்கு தொடர்பு கொண்டால் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். அதேபோல, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி குறித்த சந்தேகங்களை பள்ளிக்கல்வித் துறையின் 14417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி