அரசு ஐடிஐ-க்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2024

அரசு ஐடிஐ-க்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் அமுதவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இயங்கி வருகின்றன.


இவற்றில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு ஐடிஐ-யில் சேர 8-ம் வகுப்பு அல்லது 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மே 10 (இன்று) முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் 136 உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால்94990-55689 என்ற செல்போன் எண் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி