தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2024

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பி.ஏ. பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


 இதுகுறித்துத் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் 

*பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு,*

 எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு 


*மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு),*


 தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன

. *பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர்*

 *மேலாண்மை) படிப்புகள்* 


சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.*பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.)* படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது. இக்கல்வி நிலையம் நடத்தி வரும் *பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை)*பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவுற்ற நிலையில், தற்போது மேற்கண்ட படிப்பிற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 30.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்ப கட்டணம் – ரூ. 200/-

For SC/ST – ரூ. 100/-(சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி