வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு இந்த மாதம் கலந்தாய்வு - உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2024

வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு இந்த மாதம் கலந்தாய்வு - உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு இந்த மாதம் கலந்தாய்வு நடத்தப்படும் என அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அண்மையில் தெரி விக்கப்பட்டது.


கவிதா, மணிசந்திரன் உள்பட ஏராளமானோர் சென்னை உயர்நீ திமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுக்கள்:


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வட்டார வள மைய பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை ஏற்கெனவே பணிபுரிந்த இடத்தில் தொடர அனுமதிக்க வேண்டும். அதேநேரம், முறையாக கலந்தாய்வு நடத்தி பணி மூப்பு அடிப்படையில் அவர் களுக்கு வேறு இடங்களுக்கு இடமாறுதல் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர். இந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.


அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் முன் வைத்த வாதம்:


தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 725 வட்டார வள மைய பயிற் றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த மாதம் இதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாநில அளவில் முன்னுரிமை தகுதியின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


நீதிமன்ற வழக்குகள் காரணமாக, பலர் அதே இடத்தில் தொடர்ந்து பணி யாற்றி வருகின்றனர் என்றார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


வட்டார வள மைய பயிற்றுநர் கலந்தாய்வு வெளிப்படைத் தன் மையுடன் நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை கல்வித் துறை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர் நீதிபதிகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி