இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் - கல்வித்துறை விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2024

இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் - கல்வித்துறை விளக்கம்

 

இடைநிலை ஆசிரியா் பணி நிரவல் குறித்து ஆசிரியா்கள் மத்தியில் குழப்பம் எழுந்த நிலையில் அது குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.


தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 25.50 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். இவா்களுக்கு பாடம் நடத்துவதற்காக சுமாா் 1.07 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவா் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம் செய்யப்படுகின்றன. அதில் உபரியாக உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநிரவல் செய்யப்படும்.


அதன்படி 2023 ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,236 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு மே 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தொடக்கக் கல்வித் துறை அறிவித்தது. அந்த உத்தரவில், ‘தற்போது நடைபெற்று வரும் மாணவா் சோ்க்கையை கருத்தில் கொண்டு பணிநிரவல் நடத்தப்படவுள்ளது. எனவே, குறைந்த மாணவா்கள் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தி இருந்தது. இதற்கு இடைநிலை ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவருகிறது.


இதுதவிர மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் செய்யும் பட்சத்தில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று ஆசிரியா்கள் வேதனையுடன் தெரிவித்தனா். இந்நிலையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியா்கள் ஒன்றிய அளவில் மட்டுமே பணிநிரவல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘உபரி ஆசிரியா்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் இல்லை. ஒன்றிய அளவில் மட்டுமே நடைபெறும். எனவே, ஆசிரியா்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதேபோல், கடந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றவா்கள் நிகழாண்டும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படவுள்ளது என தெரிவித்தனா்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி