அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2024

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை

 

தமிழகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் இருந்து, அதற்கான விவரங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் பெற்று வருகிறது.


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அக்கால சூழலில், கட்டிட வசதி ஏற்படுத்த போதிய நிதியாதாரம் இல்லாத நிலையில், அந்தந்த பகுதி முக்கிய நபர்களின் பங்களிப்போடு பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டன. அந்தப் பள்ளிகள் பிற்காலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாறின. அதுபோன்ற பள்ளிகளில் ஆசிரியர் நியமனமும் பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளும் அனுமதி அரசால் வழங்கப்பட்டது. அந்தஅனுமதி இதுநாள் வரையில் தொடர்கிறது.


அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிக்கு நிகராகவே இருந்து வந்தது. காலப் போக்கில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தததால் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த போதிலும், அவ்வாறு குறைந்த எண்ணிகையில் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒதுக்கீடு அளவு குறையவில்லை.


இதனால் பள்ளிகளின் மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் மாறுபட்டு, 90 மாணவர்கள் பயிலும் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரியும் நிலை உள்ளது. இதை சரி செய்யும்நோக்கில், எந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெறுகிறாரோ அதுகுறித்த தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தினர். ஆனாலும், இது நாள் வரை ஓய்வுபெறும் தகவல் குறித்து தெரிவிக்காமல், தொடர்ந்து ஆசிரியர் நியமனத்தை செய்து வருவதாக தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் அவர்கள் கூறும் போது,“ஒரு பள்ளியில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 2,000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

7 comments:

  1. அரசு உதவி பெறும் பள்ளிகளை ஒழித்து விட்டால் பிறகு ஏது இலவச கல்வி. அரசு உதவி பெறு ம்பாள்ளிகள் ஒரு தடுப்பணை போன்றது அதை அழிக்க பல திட்டங்கள் அழித்து விட்டால் அரசு பள்ளிகளை நஷ்ட கணக்கு காட்டி தனியார் மயம் பிறகு கல்வி பணம் இருபவர்க்கு. பள்ளிகள் பெறுக வேண்டும் கல்வி எப்பொழுதும் இலவசமாக ஏழைகளுக்கு கிடைக்க அரசு உதவி பள்ளிகள் அணையாமல் பார்க்க வேண்டும் இதுவே கல்வியை காப்பாற்றும்

    ReplyDelete
  2. அரசு உதவி பெறும் பள்ளிகளும் அரசு பள்ளிகளைப் போலவே தமிழ் வழிக் கல்வியை கிராமப்புறங்களில் கற்பித்து வருகின்றன. இதில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறையின் வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் மூலமாகவே மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்களை மறைக்க நிர்வாகத்திற்கு எந்த விதமான அவசியமும் இல்லை. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் தேதி அன்று உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நிர்ணயம் செய்து உபரியாக உள்ள ஆசிரியர்களை நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்களில் பணி நிரவல் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களைச் சார்ந்தது .ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் முழுமையாக இந்தப் பணிகள் குறிப்பாக தொடக்கக் கல்வித் துறையில் செய்யப்படாத காரணத்தினால் ஒருபுறம் உபரியாக ஆசிரியர்களும், மறுபுறம் ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகள் நீதிமன்றம் செல்வதும் நடந்து வருகிறது. அரசு பள்ளிகளிலும் 20 மாணவர்களுக்கு குறைவான உள்ள பள்ளிகள் ஏராளம் உள்ளன. சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் பணி புரிய வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தி அதன் பிறகு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை சரி செய்தால் உபரி ஆசிரியர்கள் என்பதே இருக்காது. இவை அனைத்தையும் செய்யும் அதிகாரம் படித்த கல்வித்துறை இதனை செய்ய வேண்டும் என்பதே உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் நிர்வாகங்களில் விருப்பமாகும்.

    ReplyDelete
  3. அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தையும் அரசு பள்ளிகளாக மாற்ற வேண்டும்... அப்போது தான் aided school நிர்வாகிகளின் கோட்டம் அடங்கும்.... புதிய நியமனத்திற்கு லட்ச கணக்கில் பணம் வசூல், மாதம் மாதம் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் பிச்சை எடுப்பது, விடுமுறை வேண்டுமென்றால் வசூல் செய்வது... நிர்வாகத்தை ஒழித்து அனைத்து அரசு பள்ளிகளையும் அரசுடைமை யாக்கோபு வேண்டும்

    ReplyDelete
  4. இதில் சிறுபான்மை பள்ளிகளுக்கு ஒரு ஞாயம்... சிறுபான்மையற்ற பள்ளிகளுக்கு ஒரு ஞாயம்.... பொது சிவில் சட்டம் தேவை

    ReplyDelete
  5. All the aided should be undertaken by the government. There are a lot of vacancies in aided school. Moreover they are filling up the vacant only with their relatives. It is painful... Or otherwise the government has to conduct examination to fill up the vacant in government aided school.

    ReplyDelete
  6. All the aided schools should be undertaken by the government. There are a lot of vacancies in aided school. Moreover they are filling up the vacant only with their relatives. It is painful... Or otherwise the government has to conduct examination to fill up the vacant in government aided school.

    ReplyDelete
  7. அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். உதவி பெறும் பள்ளியில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. மேலும், காலி இடங்களை தங்கள் உறவினர்களைக் கொண்டு நிரப்பி வருகின்றனர். வேதனையாக உள்ளது... இல்லையெனில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு தேர்வு நடத்த வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி