BT/BRTE - சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு TRB வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2024

BT/BRTE - சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு TRB வெளியீடு.

ஆசிரியர் தேர்வு வாரியம்


பத்திரிக்கை செய்தி 


2023 - ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் 3192 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை எண் 03/2023 , நாள் 25.10.2023,34 / 2023 , நாள் 15.11.2023 மற்றும் 3B / 2023 , நாள் 17.05.2024 அன்று வெளியிடப்பட்டது.

 விண்ணப்பதாரர்கள் 13.12.2023 வரை தேர்விற்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. Online மூலம் விண்ணப்பித்தவர்கள் 41,485 பேர் , அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு 04.02.2024 அன்று " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் " OMR ( Optical Mark Reader ) வழியில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் ” OMR ( Optical Mark Reader ) வழியில் தேர்வு எழுதியோர் 40,136 பேர் . 2023 - ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் " OMR ( Optical Mark Reader ) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 18.05.2024 மற்றும் 22.05.2024 அன்று வெளியிடப்பட்டன. பணிநாடுநர்கள் " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் ' OMR ( Optical Mark Reader ) வாயிலாக தேர்வு எழுதிய தேர்வர்களின் மதிப்பெண்களுடன் பணிநாடுநர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் // ற்குத் தகுதிபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் அரசாணை ( நிலை ) எண் 147 பள்ளிக் கல்வித் ( ஆ . தே . வா ) துறை , நாள் 22.08.2023 - ல் தெரிவித்துள்ளவாறு தகுதி மதிப்பெண்களை ( Weightage marks ) சேர்த்து மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் , இவ்வாரிய அறிவிக்கையில் தெரிவித்துள்ளபடி அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு 1 : 1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 


சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்புப் கடிதம் , ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது அழைப்புக் கடிதம் . ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என பணிநாடுநர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது . மேற்கண்ட சான்றிதழ் சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( trbgrievances@tn.gov.in / Toll Free No. 18004256753 ) வழியாக தெரிவிக்கலாம் . பிற வழி கோரிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது .


மேலும் , 2023 - ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து அனைத்து விவரங்களும் வெளிப்படையாக இணையதளத்தின் வழியாகவும் , செய்திக் குறிப்பின் வாயிலாகவும் தெரிவிக்கப்படும் எனப் பணிநாடுநர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. 

நாள் : 26.05.2024 தலைவர்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி