தலைமை ஆசிரியர் பதவிக்கு TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்தல் ஏன்? - விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2024

தலைமை ஆசிரியர் பதவிக்கு TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்தல் ஏன்? - விளக்கம்

 

நடுநிலைப் பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில்  TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யும்படி மா.கல்வி அலுவலரின் நடவடிக்கை பற்றி   மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில் கீழ்கண்ட விளக்கம் அளிக்கப் படுகிறது.

பதவி உயர்வு வழங்குவதில் TET தேர்ச்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது, அதற்காக TET தேர்ச்சி பெற்று நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள், மற்றும் பணிமூப்பு பட்டியல் படி பதவி உயர்வுக்கு தகுதி  வாய்ந்தவர்கள் பட்டியல் நீதிமன்ற வழக்குக்காக தேவைப்படுகிறது அதற்காக பட்டியல் கேட்டுள்ளோம் ஆசிரியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்  தெரிவித்தார்கள்.


எனவே இதுபோன்று ஏனைய வட்டாரங்களிலும் பட்டியல் கேட்க்கப்படும், ஆசிரியர்கள் இதுதொடர்பாக யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

5 comments:

 1. வழக்குக்காக என கேட்கப்படவில்லை. பதவி உயர்வு பட்டியல் தயார் செய்ய எனக் கேட்கப்பட்டதால் தான் பிரச்சினை.

  ReplyDelete
 2. இதில் இருந்து பதவி உயர்வு பெற டெட் பரீட்சை கண்டிப்பாக தேவை என்கிற அரசாணை விரைவில் வர போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

  ReplyDelete
 3. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கே தலைமை ஆசிரியர் பதவி வழங்க வேண்டும்.... இத்தனை ஆண்டுகள் எப்படி பதவி உயர்வு வழங்கப்பட்டது என்று சீனியாரிட்டி மூலம் பணியில் சேர்ந்தவர்கள் கேட்டால்??? இத்தனை ஆண்டுகள் ஆசிரியர் நியமனம் எப்படி இருந்தது இப்போது எப்படி நடக்கிறது என்று நாம் அவர்களை பார்த்து கேட்க வேண்டும்......

  ReplyDelete
 4. மிகச்சரியாக சொன்னீர்கள்.

  ReplyDelete
 5. நடுநிலை பள்ளியில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியராக பணி அமர்த்த பட்டால் மட்டுமே மாணவர்களின் கல்வி தரம் உயரும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி