அரசு பள்ளிகளில் விதிமீறும் மாணவர்கள்; செய்வதறியாது திணறும் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2024

அரசு பள்ளிகளில் விதிமீறும் மாணவர்கள்; செய்வதறியாது திணறும் ஆசிரியர்கள்

 

அரசு பள்ளிகளில், விதிமுறைகளை மீறும் மாணவர்களை கண்டிக்கும்போது, பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம், 87 பள்ளிகள் உள்ளன. அதில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 29,143 மாணவர்கள் படிக்கின்றனர்.


இம்மாணவர்கள், பள்ளிக்கு வரும் போது, விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அவர்களை நல்வழிப்படுத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.


பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: மாணவர்கள் அனைவரும், காலை, 9:15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும். 'லோ ஹிப்', 'டைட் பிட்' பேன்ட்கள் அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது.


மாணவர்கள் அணியும் சட்டை நீளம் 'டக் இன்' செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். சீரற்ற முறையில் 'இன்' பண்ணக்கூடாது. கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.


மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை, கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மாணவர்கள் சிலர், இத்தகைய விதிகளை கடைபிடிப்பதில்லை.


வகுப்பு ஆசிரியர்கள் கண்டிக்க முற்பட்டாலும், கீழ் படிவதில்லை. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் பலரும், நீளமாக தாடி மற்றும் தலை முடி வளர்த்தியும், முறையாக சீருடை அணியாமலும் அவ்வபோது அடாவடிகளில் ஈடுபடுகின்றனர்.


பெற்றோர்களை அழைத்து தகவல் தெரிவித்தாலும் அவர்களும் கண்டு கொள்வதில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை திருத்த, கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


பெற்றோர்களும் இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழக அரசும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

4 comments:

  1. மாணவன் தற்கொலை செய்து கொள்வான்.

    படிப்பு சொல்லி கொடுக்கும் வேலையை மட்டும் பாருங்கள் என்று பெற்றோர் மிரட்டுகிறார்.

    தலைமுடி வெட்டி வர சொன்ன ஆசிரியரை புகைப்படம் எடுக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. பழைய ஓய்வு ஊதிய திட்டம் மற்றும் சரண்டர் பணத்துக்காக மட்டும் போராட்டம் பண்ணும் என் ஆசிரியர் பெரு மக்களே இது போன்ற மாணவர்களை தண்டிக்க உரிமை வேண்டும் என்று ஏன் போராட மாட்டீர்கள்??? தினமும் நிம்மதி இல்லாமல் வாங்கும் சம்பளம் எதற்க்கு???

      Delete
  2. 10ம் வகுப்பில் படிக்கத் தெரியதவர்களை TC கொடுக்கும் பள்ளி 💯 % தேர்ச்சி. அந்த மாணவர்களை சேர்க்கும் பள்ளி 100 தேர்ச்சியை இழக்கிறது...

    ReplyDelete
  3. நீதிமன்றம் இதற்கான தீர்வை சொல்ல வேண்டும்.... இல்லயேல் அரசு சில சீர்திருத்த கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.... அது சுடலை யால் இயலாது..... ஆக இதற்கு ஒரே தீர்வு அரசியலமைப்பு சட்டத்தில் நன்னடத்தை விதிகள் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும்.... அதை மீறினால் தண்டனை கடுமையான தாக இருக்க வேண்டும்..... 18வயது major என்பதை 14வயதாக மாற்ற வேண்டும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி