NEET UG Result 2024 : நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு... தெரிந்துகொள்ளுவது எப்படி..? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2024

NEET UG Result 2024 : நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு... தெரிந்துகொள்ளுவது எப்படி..?

 

NEET UG Result 2024 : இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் நடத்தப்படும் நீட் தேர்வை கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர்.

கடந்த மே 30 ஆம் தேதி நீட் தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கும் தருணத்தில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.


நீட் 2024 முடிவுகள் தெரிந்துகொள்ளுவது எப்படி?

தேசிய தேர்வு முகமையின் https://neet.ntaonline.in/undefined என்ற இணையத்தளத்தில் நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த இணையத்தளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்களை உள்ளிட்டு மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி