School Morning Prayer Activities - 24.06.2024 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2024

School Morning Prayer Activities - 24.06.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.06.2024


திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்: கல்வி


குறள் எண்:400


கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு;

மாடு அல்ல மற்றை யவை


பொருள்: ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர

மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.


பழமொழி :

Hunger breaks stone walls. 


 பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.


இரண்டொழுக்க பண்புகள் :


*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.


*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.


பொன்மொழி :


படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும். " ------ஜோசப் அடிசன்


பொது அறிவு : 


1.எந்த மாநிலத்தின் பெண்கள் அதிகம் படித்தவர்கள்?விடை: கேரளா


2. இந்தியாவின் தேசிய நிறம் எது?


விடை: குங்குமப்பூ நிறம்


English words & meanings :


 press- அழுத்த, 


pressure-அழுத்தம்


வேளாண்மையும் வாழ்வும்


ஒரு நாட்டின் மக்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதே விவசாயத்தின் முக்கிய நோக்கமாகும். 


ஜூன் 24 இன்று


கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்


கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சேரமான் காதலி  என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.


நீதிக்கதை


 அகத்தின் அழகு


முன்னொரு காலத்தில், பாரசீக மன்னர்  பீர்பாலை தனது  நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அனுப்பி வைக்குமாறு அரசர் அக்பருக்கு ஒரு ஓலை அனுப்பினார். அக்பரும் பீர்பாலை பாரசீக மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க பரிசு பொருட்களுடன் அனுப்பி வைத்தார்.


 பீர் பாலின் அறிவாற்றலை சோதிக்க விரும்பிய பாரசீக மன்னர், அரசரைப் போல் அலங்கரித்து தோற்றம் கொண்ட நால்வருடன் தானும் சேர்ந்து அரசர்கள் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்தனர்.


 பாரசீக மன்னரை பீர்பால் சந்திப்பது இதுவே முதல் முறை.  அரசரை சந்திக்க அரசவைக்குச் சென்ற பீர்பால் அரசர் இருக்கையில்  ஐந்து பேர் ஒரே தோற்றத்துடன் அமர்ந்திருப்பதை கண்டார்.


 ஐவரையும் உற்றுப் பார்த்தார். பின்பு உண்மையான அரசர் அமர்ந்திருக்கும் இருக்கையின் அருகில் சென்று மாமன்னரே!


 தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறி மன்னர் கொடுத்து அனுப்பிய  பரிசுப் பொருட்களை பாரசீக மன்னரிடம் அளித்தார் மாமேதை பீர்பால்.


 பீர்பாலை பார்த்து பாரசீக மன்னர் "எப்படி நான் தான் அரசர் என்று கண்டுபிடித்தீர்கள்" என்று கேட்டார்


 மேன்மை மிகு மன்னர் பெருமானே! இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. மற்ற நால்வரும் தங்களின் மீது கண்களை பதித்திருந்தனர். தாங்கள் மட்டுமே அரசருக்கு உரிய கம்பீரமான பார்வையுடன் என்னை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அதனைக் கொண்டு தாங்கள்தான் அரசன் என  தெரிந்து கொண்டேன். என்னதான் நாம்  வேஷம் போட்டாலும் நம்முடைய செயல்கள், முகத்தின் மூலம் உண்மையை வெளிப்படுத்தி விடுகின்றன இதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளார்கள்"என்றார் பீர்பால்.


 பீர்பாலின் அறிவுக்கூர்மையை வியந்து பாராட்டி, சில நாட்கள் அரச விருந்தினராக தங்கச் செய்து பின்பு பரிசுகள் கொடுத்து அனுப்பி வைத்தார்.


இன்றைய செய்திகள் - 24.06.2024


* அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


* ஊரகப் பகுதிகளில் மழை நீரை சேகரித்து வேளாண் பணிகளை மேம்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் 5,000 புதிய சிறு குளங்கள் ரூ.250 கோடியில் அமைக்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு.


* கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.


* விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


* முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


* கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: வெனிசுலா, மெக்சிகோ அணிகள் வெற்றி.


* ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல்.


* விளையாட்டு வில்வித்தை உலகக் கோப்பை: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை.


Today's Headlines


* The Department of School Education has ordered special training to be given to students with disabilities in classes 6 to 9 in government schools.


 * Minister E.Periyasamy announced that 5,000 new small ponds will be constructed at a cost of Rs.250 crore to collect rain water in rural areas to improve agricultural activities and raise the ground water level.


 * The CBI has registered a case of alleged irregularities in the NEET examination held on May 5.


 * ISRO has announced the successful launch of Pushpak, which carries satellites into space and back to Earth.


* The Ministry of Health has announced that the NEET examination for postgraduate medical courses has been postponed.


 * Copa America: Venezuela, Mexico win.


*  Indian tennis player Sumit Nagal has qualified for the Olympics.


 * Sports Archery World Cup: Indian women's team wins gold.


 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி