சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயற்சி: 1500+ இடைநிலை ஆசிரியர்கள் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2024

சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயற்சி: 1500+ இடைநிலை ஆசிரியர்கள் கைது

 

பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) தொடக்கக்கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை (பேராசிரியர் அன்பழகன் வளாகம்) ஜூலை 29-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.


அதன்படி, திங்கட்கிழமை (ஜூலை 29) காலை 10 மணியளவில் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை நெருங்குவதற்கு முன்பாக அதன் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்திலேயே கைதுசெய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்டனர். அதேபோல், போராட்டத்தில் பங்கேற்பதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி அருகேயுள்ள லயோலா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த ஆசிரியர்களையும் போலீஸார் கைது செய்து பேருந்துகளில் கொண்டுசென்றனர்.


கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “ஆசிரியர்களை இவ்வாறு முன்கூட்டியே கைது செய்வது ஜனநாயக விரோதமானது. கடந்த முறை 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தியபோது 12 கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உறுதி அளித்தார். ஆனால், இன்றுவரை அந்த கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை. தற்போது பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையைும் சேர்த்து 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.

இந்த அரசாணையால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியைகள். எனவே, அரசாணை 243-ஐ உடனடியாக ரத்துசெய்வதுடன் பழைய பென்சன் திட்டம், ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வது உள்ளிட்ட இதர கோரக்கைகளையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றனர்.

7 comments:

  1. Ivanungaluku Vera velai illa. Vangura sambalatthuku olunga velai seiyya thuppu illa

    ReplyDelete
    Replies
    1. Sir நீங்க என்ன குடியரசு தலைவரா இருக்கீங்களோ

      Delete
  2. இடைநிலை ஆசிரியர்கள் அ ஆ இ ஈ சொல்லிக் கொடுக்காமல் kumar ஓ Sakthivel ஓ இங்கே வந்து கமெண்ட் போட துப்பு வந்திருக்குமா.... உன் வீட்டுல இடி விழுந்தா உனக்கு வலிக்கும் தானே.....

    ReplyDelete
  3. ஒரு சில இடைநிலை ஆசிரியர்கள் தகுதி அற்றவர்கள் ஆகவே உள்ளனர்... ஒத்துக் கலாம்... ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் குறை கூற முடியாது.... 80 ℅ இடைநிலைஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுகின்றன ர்

    ReplyDelete
  4. இதற்கு அதிமுக ஆட்சி மேல் என்று கேட்கும் அளவிற்கு உள்ளது இந்த ஆட்சி. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கலைஞர் ஆட்சி என்று நினைத்து வாக்களித்தோம். நான்காம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் இன்னும் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை.

    ReplyDelete
  5. அரசாணை 243 மிகவும் ஒரு நல்ல அரசாணை இந்த அரசாணையை பயன்படுத்தி தான் பல்வேறு வெளி மாவட்ட ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் பெற்று சென்றுள்ளனர் ஆகவே மற்ற ஆசிரியர்கள் குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் இந்த அரசாணையை தயவு செய்து எதிர்க்காதீர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி