9 இணை இயக்குநர்கள் திடீர் இடமாற்றம்: தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2024

9 இணை இயக்குநர்கள் திடீர் இடமாற்றம்: தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடி

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள் 9 பேருக்கு நிர்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் ஜெ.குமரகுருபரன் இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள் 9 பேருக்கு நிர்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தொடக்கக் கல்வி இணை இயக்குநர் ச.சுகன்யா மாற்றப்பட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.


பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராக பணியாற்றும் ச.கோபிதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (நிர்வாகம்) பணியமர்த்தப்படுகிறார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக (நிர்வாகம்) உள்ள அ.ஞானகவுரி மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வி இணை இயக்குநராக (மேல்நிலைக்கல்வி) நியமிக்கப்படுகிறார்.


தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (அரசு உதவி பெறும் பள்ளிகள்) பணியாற்றி வரும் க.ஸ்ரீதேவி இடமாற்றம் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகள் இணை இயக்குநரான செ.சாந்தி மாற்றப்பட்டு தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (அரசு உதவி பெறும் பள்ளிகள்) நியமிக்கப்படுகிறார்.


பள்ளிக் கல்வி இணை இயக்குநரான (தொழிற்கல்வி) எம்.ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, தனியார் பள்ளிகள் இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநராக பணியாற்றி வரும் வெ.ஜெயக்குமார் மாற்றப்பட்டு பள்ளிக்கல்வி இணை இயக்குநராக (தொழிற்கல்வி) நியமிக்கப்படுகிறார்.


ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநரான கே.முனுசாமி இடமாற்றம் செய்யப்ப[ட்டு மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மற்றொரு இணை இயக்குநரான ந.ஆனந்தி மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இயக்குனர் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டாலும் சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்ய போவதும் இல்லை,,, புதிய தேர்வு நடத்த போவதும் இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி