ஆசிரியர்கள் போராட்டம் | பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2024

ஆசிரியர்கள் போராட்டம் | பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

 

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகரில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பூங்காவில் இன்று அழகப்பரின் மார்பளவு திருஉருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருக்குறள் படிப்பது மதிப்பெண்கள் எடுக்க மட்டுமல்ல. திருக்குறள் மூலம் தமிழாசிரியர்கள் நீதிக் கதைகளைச் சொல்லி மாணவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார். மாணவர்களுக்கு தரமான முறையில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டப்படும்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்

8 comments:

  1. எப்ப பேசி எப்ப அரசாணை வெளியிடுவீர்கள்.வாயால் வடை சுட்டுக் கொண்டே ஏமாற்றுகிறீர்கள்.

    ReplyDelete
  2. ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் ஆகிறது பேசி கொண்டே இருங்க

    ReplyDelete
  3. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தொடக்கப்பள்ளி ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம் ஐயா நீங்கள் கொண்டுவந்துள்ள அரசாணை 243 பயன்படுத்தி 10 முதல் 15 ஆண்டுகள் வெளி மாவட்டத்தில் சொந்த ஊரை விட்டு விட்டு உறவினர்களை விட்டுவிட்டு வாழ்ந்து கொண்டிருந்த எங்களுக்கு இந்த அரசாணை 243 ஆனது மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த அரசாணை 243 பயன்படுத்தி தற்போது நாங்கள் எங்கள் சொந்த மாவட்டத்திற்கு வந்து விட்டோம் எங்கள் உறவினர்களுடன் இருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

    ReplyDelete
    Replies
    1. Super... Ithu oru nalla g.o thaaane.... Other people yeen itha ethirkaranganu theriyalaa

      Delete
  4. மற்ற அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்தால் இந்த பிரச்சனை வராது அல்லது இந்த அரசாணை தேவைப்படாது

    ReplyDelete
  5. போடா துப்பு கெட்டவனே

    ReplyDelete
  6. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி