இளநிலை மருத்துவ படிப்புக்கு கவுன்சலிங் எப்போது? - மத்திய சுகாதாரத்துறை விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2024

இளநிலை மருத்துவ படிப்புக்கு கவுன்சலிங் எப்போது? - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

நீட் கவுன்சலிங் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அது தள்ளிவைக்கப்படுவதாக வெளியான செய்தி தவறானது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இம்மாத இறுதியில் கவுன்சலிங் நடைபெறலாம் என அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை மத்திய அரசு கடந்த மே 5-ம் தேதி நடத்தியது. இதில் வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நீட்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ)தலைமை இயக்குநர் நீக்கப்பட்டார்.


நீட் தேர்வு ரத்து தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்த தேசிய தேர்வு முகமை, முறைகேடுகள் மிகப்பெரியளவில் நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை எனவும், நீட் தேர்வை ரத்து செய்தால் நேர்மையாக தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் கூறியது.


.


இதையடுத்து நீட் தேர்வு கவுன்சலிங் நடவடிக்கைகளை தள்ளிப்போட உச்சநீதிமன்றம் கடந்த மாதம் மறுத்துவிட்டது. நீட் கவுன்சலிங் நேற்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.


தவறான தகவல்: மருத்துவக் கல்லூரிகள் சிலவற்றுக்கு அனுமதி கடிதம் வழங்குவது, கூடுதல் இடங்களை சேர்ப்பதுதொடர்பான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், இப்பணிகள் முடிந்ததும் கவுன்சலிங் தேதி அறிவிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கவுன்சலிங் நடவடிக்கைகள் இந்தமாதம் இறுதியில் நடைபெறலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி