இன்றைய டிட்டோஜாக் உயர் மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அவசர முடிவுகள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2024

இன்றைய டிட்டோஜாக் உயர் மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அவசர முடிவுகள்!!!

 

இன்று நடைபெற்ற டிட்டோஜாக் உயர் மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட முடிவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது 

மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 


டிட்டோஜாக்  கூட்ட முடிவு


இன்று 02-07-24 காலை நடந்த டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு காணொளி கூட்டத்தில்  அவசிய,அவசர காரணமாக  கீழ்கண்ட முடிவுகளை டிட்டோஜாக் எடுத்துள்ளது.


தொடக்கக்கல்வி துறையின் இன அழிப்பை தடுக்க வேண்டிய கடமையும் உரிமையும் ஒவ்வொருக்கும் உண்டு.


03-07-24 அன்று நடைபெறும் மறியலில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கும் வகையில்  ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து பள்ளியின் சாவியை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களிடம் இன்றே ஒப்படைக்க வேண்டும்.*


கலந்தாய்வு நடைபெறும் அனைத்து மையங்களின் முன்பாக மறியல் நடத்துவது என்று தீர்மானிக்க பட்டுள்ளது. இதில் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவசரமாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு முடிவு கேட்டுக் கொள்கிறது.


 இரா.தாஸ்

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்.

2 comments:

  1. பெரிய போராட்டமா பண்ணலாம். அப்பதான் வெளி மாவட்டத்தில் இருந்து வந்து பட்டதாரி ஆசிரியராக வேலை செய்றவங்க சொந்த ஊர்ல வேகன்ட் இருந்தாலும் முதல்ல இடைநிலை ஆசிரியர பிரமோஷன் போட்டு அந்த வேகன்ட புல் பண்ணிக்கலாம் அப்பதான் அவங்க போக முடியாது. அவங்க கஷ்டப்படட்டும் நம்ம சந்தோசமா நம்ம ஊரிலேயே பிரமோஷன் வாங்கிட்டு சந்தோசமா இருக்கலாம். கவர்மெண்டா பார்த்து அவங்க சொந்த ஊருக்கு போற மாதிரி வழிவகை செஞ்சா அதை விடக்கூடாது கேன்சல் பண்ணனும் வாங்க எல்லாரும் சேர்ந்து போராடுவோம்.

    ReplyDelete
  2. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு என்று ஒரே சங்கமாக மாற்றுங்கள் அப்பொழுதுதான் வெற்றி கிட்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி