பார்வை 2 ல் காணும் அரசுக் கடிதத்தில் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட அனுமதிக்கப்பட்டது . அதன்படி கலந்தாய்விற்கான கால அட்டவணை பார்வை -3 ல் காணும் செயல்முறைகளின் மூலம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அனுப்பப்பட்டது.
பார்வை 3 ல் காணும் 10.07.2024 நாளிட்ட செயல்முறைகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்காத தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீள வாய்ப்பளித்து 01.08.2024 , 02.08.2024 மற்றும் 05.08.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பொது மாறுதல் கலந்தாய்வு , தற்போது நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் நிறைவு பெறாத காரணத்தினால் நிர்வாக காரணம் கருதி மேற்படி கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் 01.08.2024 மற்றும் 02.08.2024 அன்று நடைபெறவிருந்த மனமொத்த மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) உரிய தொடர் நடவடிக்கையின் பொருட்டு தெரிவிக்கலாகிறது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி