மாவட்ட ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர் (Personal Clerk) - வழிகாட்டுதல்கள் மற்றும் பணியில் சேர்தல் சார்ந்து DSE செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2024

மாவட்ட ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர் (Personal Clerk) - வழிகாட்டுதல்கள் மற்றும் பணியில் சேர்தல் சார்ந்து DSE செயல்முறைகள்!

தமிழ் நாடு அரசு தலைமைச் செயலரின் நேர்முக் கடித்தில் , கல்வி முறைகள் மற்றும் தரநிலைகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கல்வி ஆய்வு ( District Education Review ) நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மறுஆய்வுக் கூட்டங்களைப் போன்று மாவட்டக் கல்வி ஆய்வு மாதந்தோறும் நடத்தப்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.


 மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் ( DLMC ) தலைவர் என்ற முறையில் , இந்த மதிப்பாய்வில் மாவட்ட ஆட்சியரின் தலைமையானது , அனைத்து பங்குதாரர்களும் தற்போதுள்ள கல்வி முறைகளை முழுமையாகப் அறிந்திருப்பதையும் , எதிர்காலத்தின் கல்வித் தேவைகளை மாற்றியமைக்கும் வகையில் மேம்படுத்துவதையும் உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளளது . மேலும் , குழந்தைகளின் கல்வி சார்ந்த தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து பெற்றோர்கள் கலந்துரையாடுவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் " கல்வி வளர்ச்சி குறைதீர் நாள் " மாதம் ஒருநாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் . பெற்றோர்கள் என அனைவரும் கொள்வார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


DSE - Educational PCs to Collector - Proceedings👇👇👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி