SSA திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய 2,000 கோடி ரூபாய் நிதியை நிறுத்திய மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2024

SSA திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய 2,000 கோடி ரூபாய் நிதியை நிறுத்திய மத்திய அரசு

 


எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய 2,000 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியது. மத்திய அரசின் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால் ரூ .2,000 கோடி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 அரசு பள்ளிகளை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து, புதிய கல்வி கொள்கையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்துவதே” பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டம் கொண்டுவரப்பட்டது. புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு தொடங்கும் பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.


 இந்நிலையில் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை ஏற்காததால்  எஸ்.எஸ்.ஏ.விற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் ரூ .2,000 கோடி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

2 comments:

  1. முதல்ல இந்திய ஒன்றிய அரசுன்னு சொல்லி தமிழக அரசுக்கு பல்லாக்கு தூக்காதீர்கள் மேலும் மத்திய அரசுடன் ஒத்து போய்தான் மாநில அரசு செயல்படனும் அப்படில்லைன்னா இது போன்ற விசயங்கள் நடக்கத் தான் செய்யும்

    ReplyDelete
    Replies
    1. ஏன்டா நாயே மோடி கொண்டு வரும் கல்வித் திட்டம் என்னன்னு தெரியாமாடா உனக்கு..
      3,5,8,வகுப்புக்கு பொதுத்தேர்வும் ஹிந்தி கட்டாயமாக்கும் திட்டம் தான் அந்த திட்டம்..3,5,8பொதுத்தேர்வுத்திட்டமே குழந்தைகளுக்கு எதிரானது ..முட்டாப்பயல்களா.Union. of state. என்பதன் தமிழாக்கம் என்னடா...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி