'பள்ளிக்கல்வித்துறை மீது ஆசியர்களுக்கு அதிருப்தி மேல் அதிருப்தி' - பின்னணி என்ன? - விகடன் செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2024

'பள்ளிக்கல்வித்துறை மீது ஆசியர்களுக்கு அதிருப்தி மேல் அதிருப்தி' - பின்னணி என்ன? - விகடன் செய்தி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி டிபிஐ வளாகம் முன்பு நடந்த போராட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள், "பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை குண்டுக்கட்டாக போலீஸார் தூக்கிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆசிரியர்கள் போராட்டம்

எஸ்.தேவராஜன்

இது குறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் பேசுகையில், "போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. ஆனால் போராட்டத்தை தொடங்கும் முன்பாகவே போலீஸார் எங்களை கைது செய்கிறார்கள். இந்த ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும். தொடர்ச்சியாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்த அரசு செவி கொடுத்து கேட்பதில்லை. கடந்த முறை நாங்கள் போராட்டம் நடத்தியபோது 'எங்களின் 30 அம்ச கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என தொடக்க கல்வி இயக்குநர் உறுதி அளித்தார்.


ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இந்த ஒரு அரசாணையால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் ஆசிரியைகள்தான். எனவே, இந்த அரசாணையை உடனே ரத்து செய்வதுடன், மற்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றனர்.


இது குறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு அவர்களுடன் பேசி குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருபக்கம் ஆசிரியர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மறுபக்கம் அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. இது நியாமான அணுகுமுறை இல்லை. குறிப்பாக சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 243- தான் ஆசிரியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஒன்றிய அளவில் சீனியாரிட்டி வைத்து டிரான்ஸ்பர் கொடுத்து வருகிறார்கள்.


இந்த அரசாணையின் மூலம் மாநில அளவில் சீனியாரிட்டி வைத்து டிரான்ஸ்பர் கொடுக்கிறார்கள். இதனால் ஒன்றிய அளவில் மூத்தவர்களாக இருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பலருக்கு பதவி உயர்வு இல்லாமலேயே ஓய்வு பெரும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவேதான் பழைய முறையை கொண்டுவர என ஆசிரியர்கள் கேட்கிறார்கள். இது நிர்வாகத்தின் எளிமைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். கல்வி சார்ந்தோ, மாணவர்களின் நலன் சார்ந்தோ, சமூகத்தின் தேவைகளின் அடிப்படையிலோ நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் வேலைகளை கொடுக்க கூடாது. குறிப்பாக பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும் வலைத்தளத்தில் ஏற்றும் வேலையை ஆசிரியர்களுக்கு கொடுக்கிறார்கள். அதில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய பாடநூல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் படத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய எவ்வளவு காலம் ஆகும். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தால் கற்றல், கற்பித்தலில் எப்படி கவனம் செலுத்த முடியும். எனவே அரசு ஆசிரியர்களை தொந்தரவு செய்யக் கூடாது" என்றார்.

8 comments:

  1. ஐயா பள்ளிக் கல்வித் துறையின் மீது ஆசிரியர்களுக்கு எந்த ஒரு அதிருப்தியும் இல்லை தற்போது கொண்டு வந்துள்ள அரசாணை 243 மிகவும் நல்ல அரசாணை இதனை பயன்படுத்தி பல்வேறு தென் மாவட்ட ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் ஆகவே இந்த அரசாணையை எதிர்ப்பது நல்லது இல்லை கல்வித்துறை வரலாற்றிலேயே கொண்டுவரப்பட்ட அரசாணைகளிலேயே மிகச்சிறந்த அரசாணை 243 தான் என்பது எங்களின் தனிப்பட்ட கருத்து

    ReplyDelete
    Replies
    1. நிதி இல்லை என்று எந்த வேலைவாய்ப்பும் கொடுக்காமல் இந்த ஆட்சியை 5 ஆண்டுகள் முடித்தால் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை என்னாவது? அடுத்த ஐந்து ஆண்டும் இவர்களை நம்பி எப்படி வாக்களிக்க முடியும்? ஏனெனில் மத்தியில் பிஜேபி ஆட்சி...

      Delete
  2. முதல்வரே நீ தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்ன பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய படுவார்கள் சொன்னல ல அது உன் அப்பன் மாதிரி காற்றோடு காற்றாய் கரைந்து விட்டதா???

    ReplyDelete
  3. வீனா போனவனே நீயெல்லாம் ஏன் ஆட்சியில் இருக்க

    ReplyDelete
    Replies
    1. நீங்க எவ்வளவு தான் கதறுநாலும் உங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்காது.. உங்கள் சுய நலத்திற்காக ஓட்டு போட்டீர்கள். அரசியல் வாதிகளை விட நீங்கள் தான் இந்த நாட்டிற்கு சாப கேடு

      Delete
  4. வேலை பளு குறைவாக இருப்பதால்தான் ஆசிரியர்கள் இதுபோல் அடிக்கடி போராட்டம் நடத்துகிறார்கள். மற்ற துறைகளின் ஊழியர்களை ஒப்பிடும்போது இவர்களது வேலை பளு பன்மடங்கு குறைவு மற்றும் ஊதியம் மிகவும் அதிகம். எந்தவொரு அரசு ஊழியர் ஆவது 4:30 மணிக்கு வீட்டில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை நீங்கள் பார்க்க முடியும். பள்ளியில் அவர்களின் வேலை நேரமும் மிகவும் குறைவு. அவர்களுக்கு அதிக வேலையும் முழு நேர பணியும் கொடுத்தால் போராட்டங்களுக்கு வேலை இல்லை.

    ReplyDelete
  5. 243 அரசாணை,
    தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும்,
    நியாயமாக பல்லாயிரம் ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு பணி மாறுதல் கிடைக்க பெற்று உள்ளனர்,
    பிரின்ஸ் கஜேந்திர பாபு இந்த அரசாணையை எதிர்ப்பது
    அதிர்ச்சி அளிக்கிறது,
    அவரது போக்கு சந்தேக படும் படியாக உள்ளது,
    ... அய்யா சற்றேனும் கல்வித்துறை மீது அக்கறை காட்டுங்கள்,
    ... தயவு கூர்ந்து,
    வேலை இல்லாமல் இருக்கும் பணி வாய்ப்பு கிடைக்க ஆசிரியர்களுkku
    குரல் கொடுங்கள்...

    ReplyDelete
  6. நிதி இல்லை என்று எந்த வேலைவாய்ப்பும் கொடுக்காமல் இந்த ஆட்சியை 5 ஆண்டுகள் முடித்தால் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை என்னாவது? அடுத்த ஐந்து ஆண்டும் இவர்களை நம்பி எப்படி வாக்களிக்க முடியும்? ஏனெனில் மத்தியில் பிஜேபி ஆட்சி...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி