நல்லாசிரியர் விருது
பள்ளியினுள் வாகனத்தை நிறுத்தியவுடன் ஓடி வந்து, ஒரு கூட்டம் வணக்கம் சொல்லி, "நான்தான் சாருக்கு முதலில் வணக்கம் சொன்னேன். இல்லை நான்தான் முதலில் வணக்கம் சொன்னேன்" என்று செல்லமாய் சண்டைகளிட்டு துள்ளி குதிக்கும் போதும்..................
"ஆசிரியரின் பையை நான்தான் கொண்டு போவேன். இல்லை நான்தான் கொண்டு போவேன்" என்று அன்பால் வாக்குவாதம் செய்யும்போதும்........
பாடம் நடத்தும்போது சிறிய இருமல் வந்துவிட்டால், "இந்தாங்க சார் தண்ணி" என்று நான்கிற்கு மேற்பட்ட செல்லங்கள் அன்பாய் நீட்டும்போதும்..................
பள்ளிக்கு செல்லாத நாளுக்கு அடுத்த நாள் செல்லுகையில் உரிமையோடு ஓடி வந்து, ஏன் சார் வரவில்லை. "என்ன ஆச்சி உங்களுக்கு" என்று விசாரிக்கும் போதும்...................
புது பேனா ஒன்னு வாங்கி, "முதல் எழுத்து, நீங்க எழுதி தாங்க" சார்னு கேட்கும்போதும்...................
பென்சில் இருந்தா கொடுங்கடா என்று கேட்கும்போது, அனைவருமே அவசரத்தில் பையில் தேடி, பென்சில் தவிர மற்ற அனைத்தையும் எடுக்கும் வேளையில், இந்தாங்க சார்னு முன் பெஞ்சி மாணவன் உலகையே ஜெயித்தவன் போல் நீட்டும் போதும்...................
ஆசிரியர் தினமன்று ஓடி வந்து, கை குலுக்கி, பயத்தில் பாதி முழுங்கி நல்வாழ்த்து கூறும்போதும்..................
ஐந்து ரூபாய் பேனா வாங்கி, "ஆசிரியர் தின வாழ்த்துக்கள்" சார் என்று தந்து, நான் "சாருக்கு பேனா கொடுத்தேன் நான் சாருக்கு பேனா கொடுத்தேனு" அன்றைக்கு முழுவதும், நாம் அத வச்சி எழுதுகிறோமா என்று எட்டி பார்க்கும் போதும்.......................
வருகின்ற மகிழ்வுதான்
ஒரு ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது.
பள்ளியை கோவிலாகவும், மாணவர்களை சோறிடும் தெய்வமாகவும் நினைக்கும் ஒரு நல்ல ஆசிரியருக்கு இதுவே நல்லாசிரியர் விருது.!!!
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி