தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்கவும் , பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்திட Protection of Children from Sexual Offences Act - 2012 மற்றும் பாதுகாக்கும் சட்டம் 2013 சட்டத்தினை மாநில அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படுத்தி வருகிறது.
இச்சட்டத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ளக புகார் குழு ( Internal Complaints Committee - ICC ) கட்டாயம் அமைத்திட வேண்டும் . தங்கள் பள்ளிகளில் பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்கவும் , புகார் தெரிவிக்கவும் , விசாரணை மேற்கொள்ளவும் தங்கள் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் உள்ளக புகார் குழுவானது கீழ்க்கண்ட விவரப்படி , உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அதன் விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தங்கள் பள்ளிகள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலத்தில் 05.09.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் இரண்டு பிரதிகளில் ஒப்படைத்திடுமாறும் . பெறப்பட்ட படிவத்தினை எண்ணிக்கை வாரியாக இவ்வலுவலகத்துக்கு 06.09.2024 அன்று மதியம் 12.00 க்குள் நேரிடையாக அ 6 பிரிவிடம் ஒப்படைக்குமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ICC Committee - CEO Proceedings - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி