செப்டம்பர் -5:
ஆசிரியராகப் பணியாற்றி, குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் - ஆசிரியர்களைப் போற்றிப் பாராட்டும் ஆசிரியர் திருநாள்.
தொழிலாளர் வர்க்கமாக மக்களை அணிதிரட்டிய வ.உ. சி அவர்களின் பிறந்த நாளில் அவரின் இரத்தமும், தியாகமும் பெற்றுத் தந்ததுதான் இந்திய விடுதலை என்ற உணர்வுடன் ஆசிரியர் தின வாழ்த்துகள்.
"அறிவை விரிவுசெய்!
அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்!
உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!"
என்ற புதுச்சேரி கண்ட தமிழ் ஆசிரியர் கனக சுப்புரத்தினம் என்ற பாவேந்தர் பாரதிதாசனார் வரிகள் ஆசிரியர் தினத்திற்கு மிகவும் பொருந்தும்.
வாழ்நாள் முழுவதும் கற்றுணர்ந்து, தனது அறிவை விரிவுசெய்து கொண்டே இருப்பவர்தான் ஆசிரியர்.
ஆசிரியரின் பரந்த, விரிந்த அறிவு மாணவர்களிடம் கல்வியின் பால் ஆர்வத்தைப் பெருக்கும், சகோதரத்துவத்தை உணரச் செய்யும். சமத்துவச் சமூகம் படைத்திட ஆசிரியரின் அன்பும், அறிவும் பெரும் பங்கு ஆற்றும்.
இவற்றை வரலாறு நமக்கு உணர்த்தி உள்ளது.
மிகுந்த சவால் மிக்க இன்றையச் சூழலில், ஆசிரியர்கள் மன உறுதியுடன், கூடுதல் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்.
மன உறுதியுடன் நம்புகிறோம்
நாம் வெல்லுவோம் ஓர் நாள்!
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
"கிராமப் பள்ளி ஆசிரியர்" என்ற தலைப்பில் ஆலிவர் கோல்ட் சிமித் எழுதிய கவிதை இன்றையக் கல்விச் சூழலில் நாம் கடந்து வந்துள்ள பாதையையும், எதிர்கொள்ள வேண்டிய சவாலையும் உணர்த்துகிறது என்பதனால் ஆசிரியர் தினத்தில் அக்கவிதையை பகிர்கிறேன்.
The Village Schoolmaster by Oliver Goldsmith
Beside yon straggling fence that skirts the way
With blossom'd furze unprofitably gay,
There, in his noisy mansion, skill'd to rule,
The village master taught his little school;
A man severe he was, and stern to view,
I knew him well, and every truant knew;
Well had the boding tremblers learn'd to trace
The days disasters in his morning face;
Full well they laugh'd with counterfeited glee,
At all his jokes, for many a joke had he:
Full well the busy whisper, circling round,
Convey'd the dismal tidings when he frown'd:
Yet he was kind; or if severe in aught,
The love he bore to learning was in fault.
The village all declar'd how much he knew;
'Twas certain he could write, and cipher too:
Lands he could measure, terms and tides presage,
And e'en the story ran that he could gauge.
In arguing too, the parson own'd his skill,
For e'en though vanquish'd he could argue still;
While words of learned length and thund'ring sound
Amazed the gazing rustics rang'd around;
And still they gaz'd and still the wonder grew,
That one small head could carry all he knew.
But past is all his fame. The very spot
Where many a time he triumph'd is forgot.
ஆசிரியர் தின வாழ்த்துகளுடன்,
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி