தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் - ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2024

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் - ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

மழைக்கு நடுவே ஆசிரியர்களுக்கு பயிற்சி! ஆதிக்கம் செலுத்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர்! கலெக்டர்கள் வசமாகிவிட்டதா கல்வித்துறை? முதலமைச்சருக்கு ஐபெட்டோ கடிதம்! 

https://velsmedia.com/thanjavur-collector-decides-to-train-women-teachers-amid-rain/

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

தொடக்கக்கல்வித் துறையில் ஆய்வு மேற்கொள்ளவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், தொடக்கக்கல்வி இயக்குநர், இணையக்குநர், துணை இயக்குநர்,உதவி இயக்குநர், மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்,திட்ட இயக்குநர்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்,வட்டார வளமைய ஆசிரியர்கள் என இருக்கும்போது தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் அவர்கள் 1,2,3ஆம்   வகுப்பு  ஆசிரியர்களுக்கு

(19/10/2024)ம் தேதியில் கூட்டம் நடத்துவது வித்தியாசமாக உள்ளது.

நிர்வாகத்தில் பல்வேறுபட்ட துறைகள் இருக்கும்போது, தஞ்சை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது வேதனை தருவதாக  உள்ளது.கைகளைக்கட்டிவிட்டு சித்திரம் வரையச் சொன்னால் எப்படி இயலும்?கற்பித்தல் பணியை மட்டும் சுதந்திரமாக செய்யும்போது இலக்கினை எளிதில் அடையலாம் தாங்கள் நன்கறிந்த  ஒன்று.எனவே தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கூட்ட நடவடிக்கையை ரத்து செய்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு துணை முதல்வர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், உடனடியாக தலையிட்டு தக்க முடிவு எடுத்து ஆசிரியர் நலன் காத்து உதவிட பெரிதும் வேண்டுகிறேன்.


தங்கள் உண்மையுள்ள 

ந.ரெங்கராஜன்

இணைபொதுச் செயலாளர்

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி 

பொதுச் செயலாளர் உலகத் தமிழ் ஆசிரியர் பேரவை

1 comment:

  1. கொலை கொள்ளை கஞ்சா சமூக சீர்கேடு குடி தண்ணி சாலை சீர்கேடு பட்டா சிட்டா இதைல்லாம் இதல்லாம் சரி செய்வது ஆட்சியர் வேலை.இதல்லாம் நாசமா போய் கிடக்கு இத விட்டுட்டு பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டாங்க .சாம்பிளுக்கு ஒரு ஆறு மாசம் அரசு பள்ளியில் பாடம் நடத்தி பாத்தா தெரியும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி