தஞ்சாவூரில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதவது;
“தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
PSTM
ReplyDeleteஒரு பள்ளி ஆசிரியரை பள்ளிக்கே சென்று தாக்குதல் நடத்துவது அரசு பள்ளியில் ஆசிரியர்களின் பாதுகாப்பற்ற தன்மையை காட்டுகிறது. செலவினங்களை கணக்கில் கொள்ளாமல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் தகுதி வாய்ந்த வாட்ச்மேன் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
ReplyDelete