School Morning Prayer Activities - 15.11.2024 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2024

School Morning Prayer Activities - 15.11.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.11.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம் தீ நட்பு


குறள் எண்:814


அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.


பொருள்:போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை

போன்றவரின் உறவைவிட, நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.


பழமொழி :


Anybody can make history.


எந்த மனிதனும் வரலாறு படைக்கலாம்.


இரண்டொழுக்க பண்புகள் :  


 *மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன். 


* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே  நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.


பொன்மொழி :


உண்மையை மறைக்க முனைவது, விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான் - கலைஞர் கருணாநிதி


பொது அறிவு : 


1. சூடான கிரகம் எது? 


விடை: புதன்


2. காற்று இல்லாத கிரகம் எது? 


விடை: புதன்


English words & meanings :


 Sesame Seed-எள்


Turmeric-மஞ்சள்


வேளாண்மையும் வாழ்வும் : 


இனி இயற்கை வேளாண்மையில் எவ்வாறு களைகளை கட்டுப்படுத்தலாம் என்று பார்ப்போம்.


நவம்பர் 15 இன்று


கிஜூபாய் பதேக்கா அவர்களின் பிறந்தநாள்


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.


சானியா மிர்சா அவர்களின் பிறந்தநாள்


சானியா மிர்சா (Sania Mirza ˈˈsaːnɪja ˈmɪrza; பிறப்பு 15 நவம்பர் 1986) ஓர் முன்னாள் இந்திய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். ஆறுமுறை பெருவெற்றித் தொடர் பட்டம் பெற்றுள்ளார். மூன்று முறை பெண் இரட்டையர் பிரிவிலும் மூன்று முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளார். மகளிர் டென்னிசு சங்க தகவலின்படி 2003 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெரும் வரை இந்திய ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்


நீதிக்கதை

 தெரு நாய் 


தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று வழி தவறிப்போய் அரண்மனைக்குள் நுழைந்தது.


 ஒரு அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி. அங்கே அதைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான நாய்கள் இருந்தன இந்த நாய் சற்று எரிச்சல் அடைந்து உர்... உர்...என்றது.அந்த நூறு நாய்களும் பதிலுக்கு உர்... உர்...என்றது. 


இந்த தெரு நாய் சற்று பயந்து விட்டது. இருந்தும்  சற்று கோபத்துடன் லொள்.. லொள்... என்று குரைத்தது.எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தன. இந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திக்கொண்டது. இந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது.


தெரு நாய் வெறி பிடித்ததைப் போல தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது. அந்த நாய்களும் அதே போல் குரைக்க ஆரம்பித்தன.  இந்த தெரு நாய் பயத்தின் உச்சத்தில் வெறி பிடித்ததைப் போல   கத்திக் கொண்டே மயங்கியது.


நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அது புரிந்து இருக்கும் தன்னை சுற்றியுள்ளவை தன்னுடைய பிம்பங்கள் தான்  வேறு நாய்கள் அல்ல என்பது.


நீதி :  இந்த உலகம் கண்ணாடி போன்றது. நீ கோபப்பட்டால்  பதிலுக்கு கோபம்  கிடைக்கும்.


நீ  அன்பை செலுத்தினால் உனக்கு அன்பு கிடைக்கும்.


இன்றைய செய்திகள் - 15.11.2024


* பொதுப்பணித்துறையிடம் இருந்து ஆறுகள், அணைகளை தவிர மற்ற நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்.

* பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க பள்ளிகளில் சிறப்புக் குழு: தமிழக அரசு தகவல்.

*70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டம்: காப்பீடு அட்டை வேண்டி இதுவரை 5 லட்சம் பேர் பதிவு.

* டெல்லியில், காற்று மாசு கலந்த பனிமூட்டம் காரணமாக இன்று 300-க்கு மேற்பட்ட விமானங்கள், 12 ரயில்கள் ரத்து.

இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

* இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் திப்பு சுல்தானின் வாள் ரூ.3.4 கோடிக்கு ஏலம்.

* ஜப்பான் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக முறை 200+ ரன்கள் அடித்த  (8 முறை) முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.


Today's Headlines


* It is reported that the Tamil Nadu government is considering handing over water bodies other than rivers and dams to the local bodies from the Public Works Department.

* Special committee in schools to protect against sexual harassment: Tamil Nadu Govt.

 * Ayushman insurance scheme is to benefit senior citizens above 70 yrs: 5 lakhs have been registered for insurance cards so far.

 * In Delhi, more than 300 flights and 12 trains have been canceled today due to fog mixed with air pollution.

 Due to this, the normal life of the people there has been greatly affected.

*  Tipu Sultan's sword fetches Rs 3.4 crore at UK auction

 * Japan Badminton Tournament: PV Sindhu advances to the next round.


*  India has set a huge world record of becoming the first team to score 200+ runs in a year (8 times) in the history of T20 cricket.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி