எண்ணும் எழுத்தும் பயிற்சியில் மரணமடைந்த ஆசிரியர்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2024

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் மரணமடைந்த ஆசிரியர்!!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தாதன் திருவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியரும்,

*இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் (SSTA) கீழையூர் வட்டாரச்செயலாளரும் ஆகிய  V.சண்முகராஜன் அவர்கள் 

குருக்கத்தியில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் மாவட்ட கருத்தாளர் பயிற்சியில் கலந்து கொள்ளும்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக  மரணம் அடைந்தார்_. 


*நம்மோடு  நெருங்கி பயணித்து நாகப்பட்டினம் மாவட்ட திறப்பு விழாவில் தேனியைப் போன்று  சுறுசுறுப்பாக பணியாற்றிய அருமை மூத்த சகோதரரின் இழப்பு  மிகுந்த மனவேதனையை தருகிறது.


*அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் :

*SSTA-மாநில தலைமை


 *இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம்(SSTA)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி