சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாரர் மொஹைதீன் அப்துல் காதர் என்பவரின் இரு மகள்கள் ஆயிஷா ஷாஜனா மற்றும் அனபா இர்னாஸ் ஆகியோரை சிறப்பு வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையின்றி வருகைப்புரிந்தால் மட்டுமே கோல்டன் ஜுப்ளி பள்ளியில் பயில அனுமதிக்க இயலும் என்று எழுதி வாங்கப்பட்டுள்ளது சார்ந்து வழக்கு தொடர்ந்துள்ளார் . இவ்வழக்கு சார்ந்து , பள்ளி நிர்வாகத்தால் , சிறப்பு வகுப்புகளுக்கு வருகைப் புரிவது கட்டாயமில்லை என மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு 02.07.2024 அன்று மேல்நடவடிக்கை இன்றி முடித்துவைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறாமல் இருக்க தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய அறிவுரை வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ( தனியார் பள்ளிகள் ) அறிவுறுத்தப்படுகிறது .
இணைப்பு : பார்வையில் காணும் ஆணை நகல்...
தப்பித்தவறிக்கூட வருங்கால மனித வளம் விடுமுறை நாட்களில் கற்றல் மற்றும் திறனூக்க முயற்சிகளில் பள்ளி விடுமுறை நேரத்தை வீணடிக்காமல் சினிமா கிரிக்கெட் போன்ற மூளை மழுக்கும் விஷயங்களில் அமிழ்த்தி மங்குனி சமுதாயம் சமைப்போமா..?
ReplyDelete