மாணவிகள் அனைவரும் `காவல் உதவி` செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் - உயர் கல்வித் துறை வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2024

மாணவிகள் அனைவரும் `காவல் உதவி` செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் - உயர் கல்வித் துறை வேண்டுகோள்!

பெண்கள் சுதந்திரமாகவும் , பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் , ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ' காவல் உதவி ' செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

அவசர காலங்களில் ' சிவப்பு நிற அவசரம் ' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக , பயனாளர் விவரம் , தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ , கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும் . மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

இச்செயலியை Google Play Store , App Store இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி