சமக்ரா சிக் ஷா திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் இந்த ஐ.சி.டி.,யின் பல கோடி ரூபாய் நிதியை, வேறு திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பி.எட்., கணினி ஆசிரியர்கள் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில பொதுச்செயலர் குமரேசன் கூறியதாவது:
மாணவர்களுக்கு கணினி அறிவியலை கற்பிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு ஆசிரியருக்கு ஆண்டு சம்பளமாக, 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இதற்காக உயர்நிலையில் 6,454, நடுநிலையில் 8,209 என மொத்தம், 14,663 கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதில், 'இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்' பணியாற்றும் 8,200 தன்னார்வலர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இது, மத்திய அரசின் விதிகளுக்கு எதிரானது. இங்கு, தகுதியுள்ள பி.எட்., படித்த கணினி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எவ்வித ஆசிரியர் நியமனமும் இல்லை. எல்லா பணிகளையும் தற்காலிக நியமனம் செய்தால் இனி படித்தவர் அனைவரும் இது போன்ற கட்சிகளுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
ReplyDelete12 ஆண்டு காலம் நம்பி தற்காலிக பணியில் உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் இன்னும் நிரந்தரமாக்க வில்லை. இன்னும் மேலும் மேலும் தற்காலிக நியமனம் அனைத்து துறைகளிலும் செய்துவிட்டு அரசியல்வாதிகள் மட்டுமே கோடிகளில் (அனைத்து கட்சி) புரண்டால் படித்தவர் எதிர்காலம்????????
ReplyDelete