TET தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்துவோம் - திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2024

TET தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்துவோம் - திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

 

மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.


நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்..... நாகை மாவட்டத்தில் இயல்பான வாழ்க்கை திரும்பி உள்ளது. நாகை மாவட்டத்தில் 5400 ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தது. நாகை மாவட்டத்தில் மழை பெய்தால் மழை பெய்து 15 நிமிடம் இடைவெளி விட்டாலே தண்ணீர் வடிந்து விடுகிறது. தற்போது வரை எந்த பாதிப்பும் அங்கு கிடையாது தண்ணீர் முழுமையாக வடிந்த பிறகு பயிர்கள் சேதம் இருந்தால் அந்த பாதிப்பு குறித்து கணக்கிடப்படும் அதன்பின் தேவையான நிவாரணம் விவசாயிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மழை நின்ற பிறகும் பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக இருந்தால் மட்டும்தான் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.


பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிதி நெருக்கடி இருந்த பொழுதும் அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கினோம். அதேபோல அவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது அவர்களை முழு நேர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை உள்ளது அது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தேர்தல் வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.


அந்த வகையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களின் தேவை இன்னும் அதிகம் இருக்கிறது. டெட் தேர்வுல் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்துவோம் என்றார்.



6 comments:

  1. அன்பில் அண்ணா வணக்கம்... போகிற போக்கில் அள்ளி விடாதீங்க. டெட் தேர்ச்சி பெற்றவர்களை எப்படி ஆசிரியர் ஆக்க முடியும்?! தெளிவான கொள்கை முடிவு எடுங்கள். பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளை நம்பாதீர். உங்கள் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது அவர்களின் முழு நேரப் பணி.

    ReplyDelete
  2. அவர் பேட்டியில் 19 ஆசிரியர்கள் நியமிக்கப்படும் என்றுதான் கூறியுள்ளார் TET தேர்வு பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை Nes தெளிவாக போடுங்க புளுகாதிங்க

    ReplyDelete
  3. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  4. PSTM physical education posting pannunka sir

    ReplyDelete
  5. TET மட்டும்
    Paper =1 24000 பேர்
    Paper =2 45000 பேர்
    தேர்ச்சி பெற்று உள்ளனர்

    தேர்தல் நேரத்தில் அள்ளி விட்டு கொண்டு இருக்கிறார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி