1-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்குவதில் 7 மாத தாமதம்: கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் பெற்றோர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2025

1-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்குவதில் 7 மாத தாமதம்: கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் பெற்றோர்

 

தமிழகத்​தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி​பெறும் பள்ளி​களில் ஒன்றாம் வகுப்பு மாணவர்​களுக்கு 7 மாதங்கள் கடந்​தும் சீருடை வழங்​காமல் காலதாமதம் ஏற்பட்​டுள்ள​தால் மாணவ, மாணவிகள் விலை கொடுத்து சீருடை வாங்​கும் நிலை ஏற்பட்​டுள்​ளது.


மாநில பாடத்​திட்​டத்​தின்​கீழ் 37 ஆயிரத்து 576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி​பெறும் பள்ளி​களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்​களுக்கு இலவசசீருடை திட்டம் செயல்​படுத்​தப்​பட்டு வருகிறது. தமிழ்​நாடு டெக்ஸ்​டைல் கார்ப்​பரேஷனிடம் இருந்து துணி​யைப் பெற்று சமூக நலத்​துறை அங்கீகரித்த சொசைட்​டிக்கு வழங்கி சீருடை தைத்து வழங்​கப்​பட்டு வருகிறது.இந்த கல்வியாண்​டில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி​களில் செப்​டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடத்​தப்​பட்​டது. இதில் தொடக்க நிலையான 1-ம் வகுப்பு தவிர மீதமுள்ள அனைத்து வகுப்பு மாணவர்​களுக்​கும் சீருடை வழங்​கப்​பட்​டுள்​ளது. 1-ம் வகுப்​புக்கு மட்டும் 7 மாதங்​களாகி​யும் சீருடை வழங்​காமல் தாமத​மாகி உள்ளதாக பெற்​றோர்​கள், ஆசிரியர்கள் தெரி​வித்​துள்ளனர்.


சமூக நலத்​துறை சார்​பில் சீருடை வழங்​குவது தாமதமான காரணத்​தால் அருகில் உள்ள துணிக்​கடைகளில் ரூ.200 முதல் ரூ.400 வரை ரெடிமேட் சீருடைகளை வாங்கி பயன்​படுத்தி வருவதாக பெற்​றோர்கள் தெரி​வித்​தனர். இதுகுறித்து, சமூக நலத்​துறை அதிகாரிகள் கூறிய​தாவது: ஒவ்வோர் ஆண்டும் பள்ளி​யில் சேரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்​களின் சீருடை அளவு ஏற்கெனவே படித்த மாணவர்​களின் அளவை வைத்து வழங்​கப்​பட்டு வந்தது.


தற்போது முதல் வகுப்பு மாணவர்​களிடம் அளவு எடுத்து சீருடை வழங்க திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால், அரசு பள்ளி​களில் மாணவர் சேர்க்கை சரஸ்வதி பூஜை வரை நடைபெற்​றது. அதன் பின்னர் முதல் வகுப்பு மாணவர்​களுக்கு கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எண் வழங்​கப்​பட்​டது. தொடர்ந்து மாணவர்​களின் விவரங்கள் பெற நவம்பர் மாதமாகி​விட்​டது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச, வேட்டி சேலை வழங்​கு​வ​தில் மும்​முர​மாகி​விட்ட நிலை​யில், தமிழ்​நாடு டெக்ஸ்​டைல் கார்ப்​பரேஷனிடம் இருந்து துணி வாங்​கு​வ​தில் தாமதம் நிலவுகிறது. தமிழ்​நாடு டெக்ஸ்​டைல் கார்ப்​பரேஷன், சமூக நலத்​துறைக்கு சீருடைக்கான துணியை வழங்கி​விட்​டால் சொசைட்டி மூலம் 15 நாட்​களுக்​குள் தைத்து வழங்க திட்​ட​மிட்​டுள்​ளோம். இந்த பணிகளை ஜனவரி 25-ம் தேதிக்​குள் முடிக்க திட்​ட​மிட்​டுள்​ளோம்.


ஒன்றாம் வகுப்பு மாணவர்​களுக்கு சீருடை வழங்​கு​வ​தில் ஏற்பட்ட தாமதத்​தை தவிர்க்​கும் வகையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் அளவு செய்​யும் பணியை சமூக நலத்​துறை மேற்​கொண்டு வரு​கிறது. கோவை ​மாவட்​டத்​தில் 4 ஆ​யிரம் பேர் வரைக்​கும், ​மாநில அள​வில் சு​மார் 2.83 லட்​சம் ​மாணவ, ​மாணவி​களுக்கு சீருடைவழங்க வேண்டி உள்​ளது. இவ்​வாறு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி