பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நாளை (ஜன., 9) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊர்வலம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என தேனியில் சி.பி.எஸ்., (பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்) ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் கூறினார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத்திட்டதை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதனை செயல்படுத்தவில்லை.
தொடர்ந்து 2023 ஜூலையில் மத்திய அரசின் சோம்நாத் கமிட்டி அறிக்கை, ஆந்திர மாநில அரசின் ஓய்வூதியத்திட்டம் இவற்றில் எது தமிழகத்திற்கு ஏற்புடையது என முதல்வர் ஸ்டாலினிடம் பேசி தெரிவிப்போம் என நிதி அமைச்சர் கூறினார். ஆனால் இதுவரை முடிவு செய்து அறிவிக்கவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு பணிக்கொடை வழங்க கோரியும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் நாளை(ஜன.,9) அனைத்து மாவட்ட தலைநகர்களில் ஊர்வலம் செல்கிறோம். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சம் தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
நடக்காது இராஜா நடக்காது எப்போதும் நடக்காது
ReplyDeleteDrama no ???
ReplyDelete