டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கு வரும் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2025

டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கு வரும் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

 

டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கு வரும் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.


அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) மற்றும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு (CEETA PG) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் 24-ம் தேதி முதல் தொடக்கப்படுகிறது.


மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் அறிவியல்/கலை கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி நிறுவனங்கள் ஒப்படைத்த எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான பொது மாணவர் சேர்க்கையை (TAMIL NADU COMMON ENTRANCE TEST -TANCET ) அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.


அதேபோன்று, மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள எம்.இ.,எம்டெக் (M.E.,M.Tech., M.Arch., M.Plan) போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிரத்யேக நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.


அதன்படி 2025ம் ஆண்டுக்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வரும் மார்ச் 22ம் தேதி நடைபெறும் என்றும், எம்.இ.,எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிராத்தியோக நுழைவுத் தேர்வு (CEETA-PG) மார்ச்- 23ம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதன்படி இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி 24ந்தேதி தொடங்கும் என்றும் http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி