INCOME TAX 2024-25 : தவிர்க்க வேண்டியவையும்! கவனித்துக் கணக்கிட வேண்டியவையும்!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
New Regimeல் மாற்றுத்திறனாளிகளின் பயணப்படியைத் தவிர்த்து வேறெந்த சேமிப்பும் / முதலீடும் கழிக்க இயலாது. Standard Deduction தவிர்த்து மொத்த வருமானத்திற்கும் நேரடியாக வரி விதிக்கப்படும்.
* Old Regime கணக்கீட்டில், CPSல் உள்ளோர் தங்களது CPS தொகை ₹50,000ஐ 80CDD(1B)ல் கழிக்கக் கூடாது. 80CDD(1B) என்பது NPSற்கு மட்டுமே பொருந்தும். இதை வருமானவரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
* New Regimeல் GPF, PPF, NPS & CPS உள்ளிட்ட ஊழியரின் ஓய்வூதியம் தொடர்பான எந்தவொரு அலுவலகப் பிடித்தத்தையோ / தனிப்பட்ட முதலீட்டுத் தொகையையோ கழிக்க இயலாது.
* Old Regimeன் 80CCD2ல் தற்போதோ / ITR செய்யும் போதோ CPS பிடித்தத் தொகையை மீண்டுமாகக் கழிப்பது சட்டப்படி குற்றம்.
* NPS திட்டத்தில் உள்ளோருக்கு அரசின் பங்களிப்பான 14% வருமானத்தில் சேர்த்துக் காண்பிக்கப்படும் என்பதால் அந்த அரசின் பங்களிப்பை மட்டும் கழித்துக் கொள்ள New Regimeல் வழி வகையுண்டு. தனிப்பட்ட முறையில் NPS முதலீடு செய்வோர் அரசின் பங்களிப்பை வருமானத்தில் (Income from other source) காண்பித்துக் கழித்துக் கொள்ளலாம்.
* மொத்தத்தில் Old Regimeன் 80CCD2 & New Regimeன் NPS கழிவு என்பது அரசின் பங்களிப்பை (14%) வருமானமாகக் காண்பித்து பின் கழித்துக் கொள்வதன் மூலம் அத்தொகையையும் வரிக் கணக்கீட்டிற்குள் கொண்டு வருவதற்கான வழிமுறை மட்டுமே.
* Old Regimeற்கான Standard Deduction ₹50,000/-
* New Regimeற்கான *Standard Deduction ₹75,000/-
Old Regimeல் Net Taxable Income ₹5,00,000க்குள் இருந்தால் மட்டும் ₹12,500 Rebate உண்டு என்பதால் ₹5,00,000 வரையுள்ளோருக்கு வரி வராது.
* New Regimeல் Net Taxable Income *₹7,00,000க்குள் மட்டும் இருந்தால் ₹20,000 Rebate உண்டு என்பதால் ₹7,00,000 வரையுள்ளோருக்கு வரி வராது.
* New Regimeல் Net Taxable Income ₹7,00,001 முதல் ₹7,22,220 வரை Marginal Relief உண்டு. அதன்படி, ₹7,00,000ஐ விடக் கூடுதலாக வரும் வருமானமானது, ஒட்டு மொத்த வருமானவரியைவிடக் குறைவாக இருப்பின், அக்கூடுதல் வருமானத்தை ஒட்டுமொத்த வரியிலிருந்து கழித்து மீதமுள்ள தொகை மட்டும் Rebateஆக வழங்கப்படும். இந்தக் கணக்கீடு ₹7,22,220 வரை மட்டுமே வரும். அதன்பின்னர் கூடுதல் தொகை ஒட்டுமொத்த வரியை விடக் குறையாது என்பதால் Marginal Relief இருக்காது.
இணையத்தில் உலாவரும் ஒரு சில Tax Calculatorகளில் இந்த Marginal Relief பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் 80CCD(1B)ல் ₹50,000 CPS தொகை கழிப்பது போன்றும் உள்ளது. இவையிரண்டுமே தவறான வழிமுறை. எனவே, முழுமையான Tax Calculatorகளைப் பயன்படுத்தி சரியான வருமானவரியை மட்டும் கணக்கிட்டு இறுதி நேர பதற்றத்தையும் எதிர்காலச் சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி