தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்)
மாநில உயர்மட்டக்குழு நாள்:31.01.2025
**********************
TET வழக்கு!
உச்சநீதிமன்ற வழக்கறிஞருடன் டிட்டோஜாக் தலைவர்கள் ஆலோசனை!
**********************
"ஆசிரியர்கள் பதவி உயர்வுபெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்" என்னும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்களான 221 ஆசிரியர்கள் சார்பில் புதுதில்லி உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு எண்:52482/ 2023, நாள்:14.12.2023 உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே தொகுப்பு வழக்காக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.அடுத்த விசாரணை 06.02.2025 அன்று நடைபெற உள்ளது.
மேற்கண்ட நமது வழக்கில்(S.SAKUNTHALA VS UNION GOVERNMENT OF INDIA)உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு P. வில்சன் அவர்கள் நமது தரப்பில் ஆஜராகி வருகிறார். எனவே, இவ்வழக்கை டிட்டோஜாக் சார்பில் நடத்தி வரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
திரு.சங்கரன் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் திரு அ.வின்சென்ட் பால்ராஜ்,
திரு ச. மயில்,
திரு இரா. தாஸ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. P.வில்சன் அவர்களை நேற்று (30.01.2025) சென்னையில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வழக்குத் தொடர்பாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விவாதித்தனர். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு.அ.மாயவன் Ex:MLC அவர்களும் பங்கேற்றார்
இவ்வழக்கில் நாம் மிகவும் கவனமாகவும், நுணுக்கமாகவும் செயல்பட வேண்டியுள்ளது. இவ்வழக்குத் தொடர்பாக சிலர் யூகத்தின் அடிப்படையில் பல்வேறு தகவல்களைப் பரப்பி ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்மீது ஆசிரியப் பெருமக்கள் கவனம் கொள்ளத் தேவையில்லை.
இவ்வழக்கில் டிட்டோஜாக் பேரமைப்பு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் உள்ளதால் வழக்குச் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான விவரங்களை வழக்குத் தொடுத்துள்ள ஆசிரியர்களிடம் அவரவரது சங்கத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும்.
TET வழக்கு தேசம் தழுவிய வழக்காக மாறியுள்ள நிலையில் அதன் காரணமாக நமது மாநிலத்தில் பதவி உயர்வு வாய்ப்பை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை உறுதிப்படுத்திடவும் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை வலிமையாக நடத்திட டிட்டோஜாக் உறுதி பூண்டுள்ளது.
**********************
மாநில உயர்மட்டக் குழு
டிட்டோஜாக்
***********************
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி