பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தாவிட்டால் 2026 தேர்தலில் அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2025

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தாவிட்டால் 2026 தேர்தலில் அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்

 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.


புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிதாவது: சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழிர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்.


குறிப்பிட்ட பிரச்சினையில் எதிர்ப்பு தெரிவிப்பதாலேயே கூட்டணி முறிந்துவிடும் என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் எங்களுக்கென தனி நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லா பிரச்சினையிலும் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை.


வேங்கைவயல் விவகாரத்தில் விசிக மட்டுமின்றி, நாங்களும் அதிருப்தியில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன விலங்குகளால் பயிர்கள் அழிக்கப்படும்போது, அதை இயற்கைப் பேரழிவாக கருதி, விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், சாகுபடிப் பகுதிக்குள் விலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொருத்தவரை, ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்து அமைப்பினர் பேசியவை கண்டனத்துக்குரியவை.


மத நல்லிணத்தைக் காப்பாற்றும் வகையில், அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் வழிபாட்டு உணர்வை, அரசியல் லாபத்துக்காக பாஜக பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. மிக்ஸர் பாக்கெட் வாங்கிட்டு சங்கம் மீட்டிங் போடும் 😆😆😆

    ReplyDelete
  2. வேண்டிய சம்பாத்தியம் பண்னியாச்சு, ஒட்டு போட்டா என்ன போடாட்டா என்ன

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி