ரூ.2 லட்சம் லஞ்சம்: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2025

ரூ.2 லட்சம் லஞ்சம்: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கைது

  

ரூ.2 லட்சம் லஞ்சம்: நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கைது


அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சப்பணம் வாங்கிய நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் வயது (40). இவர் 2018-ம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் இவரை பணி நிரந்தரம் செய்ய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை இவரை பணி நிரந்தரம் செய்ய மறுப்பு தெரிவித்தது.


இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டை அணுகி நிரந்தர பணி நிரந்தரத்திற்கான ஆணையை பெற்றார். இவ்வளவு காலம் பணியாற்றியதற்கான நிலுவை தொகையை ரூ.20 முதல் ரூ.25 லட்சம் இவருக்கு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனாலும் இவருக்கு பணி நிரந்தர உத்தரவு மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.


இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் ஜான் சிபு மானிக் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய சென்னை ஐகோர்ட் மீண்டும் உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷை அணுகினார்.


இவருக்கு பணி ஆணை மற்றும் நிலுவை பணத்தை கொடுப்பதற்கு லஞ்சமாக ரூ.5 லட்சம் பணத்தை நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்டுள்ளதாக தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரூ.2 லட்சம் பணம் தர முடிவு ஆகிறது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஜான் சிபு மானிக் அணுகினார்.


இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் கொடுக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப் இன்ஸ்பெக்டர்கள் சாதன பிரியா, சக்தி, ரங்கநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 comments:

  1. இந்த மேன்மை தாங்கிய கல்வி அதிகாரியை உடனடியாக பிறந்தார் பணி நீக்கம் செய்வது மிகவும் நல்லது.

    ReplyDelete
  2. இந்த மேன்மை தாங்கிய கல்வி அதிகாரியை உடனடியாக நிரந்தர பணி நீக்கம் செய்வது மிக்க நன்று

    ReplyDelete
  3. இந்த மாதிரி ஆட்களை என்கவுன்டர் செய்யனும் எத்தனை ஆசிரியர் வயித்தெரிச்சல் கொட்டினா னோ

    ReplyDelete
  4. இன்று இது மாதிரியான நிகழ்வுகள் சர்வ சாதாரணமாகி விட்டதே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி