முப்பாலில் முத்தமிழ்! - தாய்மொழிதின வாழ்த்துப் பா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2025

முப்பாலில் முத்தமிழ்! - தாய்மொழிதின வாழ்த்துப் பா!

இறைமாட்சியின் 

மெய்யுணர்ந்து 

பொறையுடைத்த, 
புகழ் 
பெருமை !

கொல்லாமை, 
கொடுங்கோண்மை 
தீவினை அச்சமென 
தெரிந்து தெளிந்து ! 
சொல்வன்மையால்
அவா அறுத்து! 
அடக்கம் 
அவையறி 
அருளுடை 
இனியவை கூறும், 
இல்வாழ்வின் 
சான்றாண்மையே!

நடுவு நிலைமையில் 
நட்பு ஆராய்ந்து,
நலம் புணைய!
செய்ந்நன்றியறிந்து 
செங்கோண்மைக 
கண்ணோட்டத்தில்! 
மனனர் சேர்ந்தொழுகும் 
மக்கட் பேறே! - நின் 
ஒப்புறவு அறிகிறேன்!

வான் சிறப்பான, - நின்
உழவின்
புகழினை
காலம் அறிந்து!
காதற் சிறப்பில் 
விருந்து ஓம்பி! 
மானம் 
அவையறிந்து - நின் 
ஊடலில் உவகையே
ஈகை!

தவத்தின் 
வலி அறிந்து, 
நெஞ்சோடு கிளைத்து, 
பழைமை 
நல்குரவும் 
நாடு! - தமிழ்.

குறிப்பறிந்து 
நலம் புணைந்துரைக்கிறேன்! 
பண்புடை பூண்டு, 
கல்வி 
கேள்விகளில் 
கனவு நிலை உரைக்கும் 
மருந்தாம்-தமிழை! 

மாதானுபங்கியின் 
வாயுரையும், 
தாய் மொழி தின வாழ்த்துகளுடன்,
அறன் வலியுறுத்தி மகிழ்கிறேன்!

-
ஆ.சந்துரு - 
பட்டதாரி ஆசிரியர்.
கதிரிமில்ஸ் மே.நி.பள்ளி
கோவை - 16.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி