அரசு உதவி மருத்துவர் பணியிடத்துக்கான தகுதி பட்டியலில் 400 மருத்துவர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2025

அரசு உதவி மருத்துவர் பணியிடத்துக்கான தகுதி பட்டியலில் 400 மருத்துவர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு

தமிழகம் முழு​வதும் புதிதாக நியமிக்​கப்​பட​வுள்ள 2,642 அரசு உதவி மருத்​துவர்​களுக்கான தகுதி பட்டியலில் இருந்து 400 மருத்​துவர்களை நீக்​கியதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், பணி நியமனம் வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்டுப்​பட்டது என உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் காலியாக உள்ள 2,642 அரசு உதவி மருத்​துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் கடந்த ஜன.5 அன்று தேர்வு நடத்​தி​யது.


அதன்படி தேர்வு முடிந்து தகுதியான மருத்​துவர்​களின் தகுதிப் பட்டியலை தேர்வு வாரியம் வெளி​யிட்​டது. அதன்​பிறகு இதில் 400 பேர் கடந்த 2024ஜூலை 15-க்கு முன்பாக மருத்துவக் கவுன்​சிலில் பதிவு செய்ய​வில்லை எனக்​கூறி தகுதிப்​பட்​டியலில் இருந்து அவர்​களின் பெயர்களை தேர்வு வாரியம் நீக்​கியது. இதை எதிர்த்து பாதிக்​கப்​பட்ட மருத்​துவர்கள் பிரியதர்​ஷினி, சாய் கணேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.


அதில், ‘‘கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதிக்கு முன்பாக தமிழ்​நாடு மருத்துவ கவுன்​சிலில் பதிவு செய்ய விண்​ணப்​பித்​திருந்​தோம். மருத்துவ பல்கலைக்​கழகம், சான்​றிதழ்கள் வழங்க காலதாமதம் செய்​த​தால் உரிய நேரத்​துக்​குள் நிரந்​தரப் பதிவு சான்​றிதழைப் பெற முடிய​வில்லை. இதற்கு பல்கலைக்​கழகம் தான் காரணம் என்ப​தால், எங்களுக்கான பணியிடங்களை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும்" எனக் கோரி​யிருந்​தனர்.


இந்த வழக்கு நீதிபதி சி.வி.​கார்த்தி​கேயன் முன்பாக விசா​ரணைக்கு வந்தது. அப்போது, மனுதா​ரர்கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம்.வேல்​முரு​கன், சான்​றிதழ் சரிபார்ப்​புக்கு தமிழ்​நாடு மருத்​துவக் கவுன்​சில் பதிவு செய்திருந்​தால் போது​மானது எனக் கூறப்​பட்​டிருந்​தது. ஆனால் தற்போது நிரந்தர பதிவு இல்லை எனக்​கூறி இவர்களை நீக்கிவிட்​டதாக வாதிட்​டார்.


அதையடுத்து நீதிபதி, தமிழ்​நாடு மருத்துவ தேர்வு வாரியம் புதிதாக நியமிக்​க​வுள்ள அரசு உதவி மருத்​துவர்​களுக்கு வழங்​கும் பணி நியமன உத்தரவு இந்த வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்டுப்​பட்டது எனக்​கூறி, இதுதொடர்பாக மருத்துவ தேர்வு வாரி​யம் ப​திலளிக்க உத்​தர​விட்டு ​விசா​ரணையை நாளைக்கு (பிப்​.26) தள்​ளிவைத்​தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி