தாய்மொழி தினத்தை கொண்டாட வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2025

தாய்மொழி தினத்தை கொண்டாட வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

 

பல்கலைக்கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்​கல்வி நிறு​வனங்​களுக்​கும் அனுப்பிய சுற்​றறிக்கை விவரம்: ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) முன்​மொழிந்த பிப்​ரவரி 21-ம் தேதி ஆண்டு​தோறும் உலக தாய்​மொழி தினமாக கொண்​டாடப்​பட்டு வருகிறது. எனவே, பல்கலைக்​கழகங்கள் மற்றும் கல்லூரி​களில் தாய்​மொழி தினத்தை விமரிசையாக கொண்டாட வேண்​டும்.


இந்தியா​வில் பல்வேறு மொழிகள் பேசப்​படும் சிறப்பை மாணவர்​களுக்கு எடுத்​துரைக்க வேண்​டும். மொழிசார்ந்த கலை நிகழ்ச்​சிகள், குழு விவாதங்​கள், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சி ஆகிய நிகழ்ச்​சிகளை நடத்​தலாம். மேலும், தாய்​மொழி தின கொண்​டாட்டம் தொடர்பான அறிக்கையை யுஜிசி இணையதளத்​தில் (www.ugc.ac.in/uamp) ப​திவேற்​றம் செய்ய வேண்​டும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி