SLAS 2025 - கள ஆய்வாளர்கள் கவனத்திற்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2025

SLAS 2025 - கள ஆய்வாளர்கள் கவனத்திற்கு

 

State Level Achievement survey -2025

கள ஆய்வாளர்கள் கவனத்திற்கு


தேர்வு நடைபெறும் நாள்

3 ஆம் வகுப்பு -04.02.2025 

5 ஆம் வகுப்பு -05.02.2025

8 ஆம் வகுப்பு -06.02.2025. 


💧கள ஆய்வாளர்கள் தங்களுக்கு SLAS தேர்வு நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிக்கு , தேர்வு நடைபெறும் நாளன்று காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்துவதற்கு முன்பாக செல்ல வேண்டும்.

தேர்வு தொடங்குவதற்கு முன்பு கள ஆய்வாளர்கள்  EMIS தளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்


💧தலைமை ஆசிரியரின் துணையுடன் பள்ளியின்‌ EMIS தளத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம்‌ மற்றும் அவர்களின் வருகையினை EMIS தளத்தில் பதிவிட வேண்டும் மற்றும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் Seating Plan ஆகிய இரண்டையும் பதிவிறக்கம்  செய்தல் வேண்டும்.


💧ஒவ்வொரு மாணவனுக்கும் , EMIS தளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு , அவர்களுக்கான Question paper code ன் படி வினாத்தாள் வழங்க வேண்டும்.


💧 வினாத்தாள் மற்றும் OMR sheet ல் மாணவர்களின் பெயர் மற்றும் விவரங்களை ஆங்கிலத்தில் Capital Letter -யில் எழுத வேண்டும்.


💧3ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தொகுப்பில் சரியான விடையினை வட்டமிட்டு விடையளித்தல் மட்டும் போதுமானது. வினாத் தொகுப்பினைப் பார்த்து OMR sheetஐ கள ஆய்வாளர்கள் நிரப்ப வேண்டும்.


💧5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாளில் வட்டமிட்டு விடையளித்து  பின்னர் OMR SHEET ல் பூர்த்தி செய்ய வேண்டும்.


💧OMR sheet ல் 

Black /Blue Ball point pen மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


💧OMR - ஐ மடக்கவோ, கசக்கவோ, கிறுக்கவோ கூடாது.


*தேர்வு முடிவுற்ற பின்னர் கள ஆய்வாளர்கள் EMIS தளத்தில் மேற்கொள்ள வேண்டியவை


💧கள ஆய்வாளர்கள் தலைமை ஆசிரியர்கள் துணையுடன் OPEN FI form பூர்த்தி செய்திட வேண்டும்.


💧 தேர்வு நிறைவு பெற்றப் பின்னர் கள ஆய்வாளர்கள் கீழ்க்கண்டவாறு வினாத்தாள் மற்றும் OMR sheet Pack செய்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

*Cover 1. :Used OMR-Seal செய்யக் கூடாது

*Cover 2 :Used Question paper-Seal செய்ய வேண்டும்

*Cover 3: Unused OMR and Question paper-Seal செய்ய வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி